காரைக்குடியில் உள்ள சென்ட்ரல் எலக்ட்ரோகெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-Central Electrochemical Research Institute) உள்ள தொழில்பழகுநர் பயிற்சி வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பயிற்சி விவரம்:


ஐ.டி.ஐ. பிரிவு



  • ஃபிட்டர்

  • மெக்கானிஸ்ட்

  • எலக்ட்ரிசியன்

  • எலக்ரானிக்ஸ் மெக்கானிக்

  • ஃப்ரிட்ஜ் & ஏ.சி. மெக்கானிக்

  • Draughtsman (Civil)

  • Turner

  • ப்ளம்பர்

  • Carpenter

  • Welder 

  •  PASAA


மொத்த பயிற்சி இடங்கள் - 29 


டெக்னீசியன் டிப்ளமோ பிரிவு



  • சிவில் பொறியியல்

  • மெக்கானிக்கல் பொறியியல்

  • எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல்

  • எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பொறியியல்


மொத்த பயிற்சி இடங்கள் - 05


பட்டப்படிப்பு பிரிவு



  • கேன்டீன் நிர்வாகம்

  • அலுவலக உதவியாளர் 


மொத்த பயிற்சி இடங்கள் - 2


கல்வித் தகுதி:



  • ஐ.ஐ.டி. துறையில் விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்பந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • டிப்ளமோ பிரிவிற்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • பட்டப்படிப்பு பிரிவிற்கு விண்ணப்பிக்க ஹோட்டல் நிர்வாகம், கேட்டரிங் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் மூன்றாண்டுகால இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  • அலுவல உதவியாளர் பிரிவிற்கு விண்ணப்பிக்க வேதியியல், இயற்பியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  • 2021/2022/2023/2024 அகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். 


வயது வரம்பு விவரம்:


ஐ.டி.ஐ. - குறைந்தபட்சம் 14 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.


டெக்னீசியன் டிப்ளமோ - 18 வயது முதல் 24 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்.


இளங்கலை பட்டம் -  21 வயது முதல் 26 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்.


உதவித் தொகை விவரம்:



  • ஐ.டி.ஐ. - ரூ.8050/-

  • டெக்னீசியம் டிப்ளமோ - ரூ.8,000/-

  • இளங்கலை பட்டம் - ரூ.9,000/-


விண்ணப்பிக்கும் முறை: 


இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும். 


ஐ.டி.ஐ. பிரிவில் விண்ணப்பிக்க https://www.apprenticeshipindia.gov.in/ - என்ற இணைப்பைக் க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். 


டெக்னீசியன் டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கhttps://nats.education.gov.in/ - என்ற இணைப்பை பயன்படுத்த வேண்டும். 


தெரிவு செய்யப்படும் முறை:


இதற்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 


நேர்காணல் நடைபெறும் நாள் குறித்த விவரம்:


30.07.2024 - காலை 9.00 மணி முதல்:


Diploma in Mechanical Engineering, ECE, EEE and Civil Engineering, Bachelor’s Degree in Physics / Chemistry and Guest House and Canteen Management


31.07.2024 காலை 9:00 மணி முதல்:


 ITI – Fitter, Machinist, Mechanic Ref. & A/c, Welder, Draughtsman (Civil), Plumber, Carpenter


01.08.2024 காலை 9:00 மணி முதல்:


  ITI – Electrician, Wireman, PASAA, Electronics Mechanic, Turner 


நேர்காணல் நடைபெறும் முகவரி:


CSIR- Central Electrochemical Research Institute,
College Road,
Karaikudi


இது தொடர்பாக முழு விவரங்களை காணhttps://www.cecri.res.in/Portals/0/Careers/APP-06-2024_AdvtCopy.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


தொடர்புக்கு - 04565 – 241219 / 218  அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்  (09.00 a.m. to 5.30 p.m.) 


மின்னஞ்சல் முகவரி  -  recruit@cecri.res.in


இதற்கு நேர்காணல் நடைபெறும் நாளுக்கு முன்பு ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.