நாட்டின் பிரபல பொத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் (Central Bank of India) நிர்வாகம் சார்ந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலாளர் பிரிவில் மொத்தம் 1000 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தகுதிகள், விவரங்களை கீழே காணலாம்.
பணி விவரம்:
மேலாளர்
மொத்த பணியிடங்கள் : 1000
பணியிடம்:
இந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் நாடு முழுவதும் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி :
- மேலாளர் பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். Certified Associate of Indian Institute of Bankers நடத்தும் தேர்வு எழுதியவர்கள் மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ள துறை சார்ந்து முன்னுரிமை அளிக்கப்படும்.
- குறைந்தது வங்கியில் மூன்றாண்டுகள் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். வங்கி நிர்வாகம், கிரெடிட் உள்ளிட்ட துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று வங்கி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், வேலைக்கு சேரும்போது சிபில் ஸ்கோர் 650 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
சீனியர் மேலாளர் பணிக்கும் இதே தகுதிகள் பொருந்தும். பணி அனுபவத்தை பொறுத்தமட்டில், குறைந்தது ஐந்தாண்டுகள் வங்கி பணியில் இருந்திருந்தால் நல்லது.
வயது வரம்பு:
மேலாளர் பணிக்கு 31.05.2023-ன் படி விண்ணப்பிக்க 32 வயது மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
Manager Scale II (Mainstream) - 48,170-1,740(1)-49,910-1,990(10)-69,810
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இதில் தகுதி பெறுபவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும்.
ஆன்லைன் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கும். ஆன்லைன் தேர்வு தொடர்பாக விவரங்கள் சென்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் இணையத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு வரும் ஆக்ஸ்ட் மாதத்தில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
தேர்வுப் பாடத் திட்டம்:
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். https://www.centralbankofindia.co.in/en -என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம் :
பழங்குடியினர்/ பட்டியலின பிரிவினர், பொதுப்பணி துறையில் பணிபுரிபவர், மகளிர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுவத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதர பிரிவினர் ரூ.850 உடன் 18% சதவீத ஜி.எஸ்.டி. தொகையையும் சேர்த்து ஆன்லைனின் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.07.2023
முக்கிய தேதிகள்:
இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://www.centralbankofindia.co.in/sites/default/files/_Notification%20_RECRUITMENT-OF-MANAGERS-IN-MMGS-II-IN-MAINSTREAM.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
இதற்கான விதிமுறைகள் குறித்து https://ibpsonline.ibps.in/cbimmjun23/- என்ற இணையதளத்தில் காணலாம்.