Central Bank Of India Recruitment 2023: செண்ட்ரல் பேங் ஆஃப் இந்தியாவில் வேலை; 5 ஆயிரம் பணியிடங்கள்...முழு விவரம்...

Central Bank Of India Recruitment 2023:: செண்ட்ரல் பேங் ஆஃப் இந்தியா வங்கியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த முழு விவரத்தை இங்கே காணலாம்.

Continues below advertisement

நாட்டின் பொதுத்துறை வங்கியான செண்ட்ரல் பேங் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு, தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்

Continues below advertisement

கல்வித் தகுதி

பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்

பணி இடம்:

இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

வயது வரம்பு:

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 20 வயது இருக்க வேண்டும். அதிகபட்சம் 28 வயது இருக்க வேண்டும்.

காலி பணியிடங்கள்: 5,000

விண்ணப்பிப்பது எப்படி

Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.gov.in)  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எல்லா விவரங்களும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் அல்லது ஃபைல் ஆக சேமித்து வைத்துக்கொள்வது நல்லது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:'

நிரந்த பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். 

பணி காலம்:

இந்தப் பணி ஓராண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலானது. அதோடு, பணிதிறன் அடிப்படையில் மூன்று ஆண்டுகள் வரை பணிக்கால ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கவனிக்க:

விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண் மற்றும் இ-மெயில் முகவரியை வழங்குமாறு கேட்டுகொண்டுள்ளப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.04.2023

இது தொடர்பாக கூடுதல் விவரங்களை Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.gov.in) என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

Job Alerts: இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. வெள்ளிக்கிழமையன்று மெகா வேலைவாய்ப்பு முகாம்.. எங்கே எப்போது? முழு விவரம்..

Continues below advertisement
Sponsored Links by Taboola