தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தில் upper Division, Clerk, stenographer, MTS ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 3865 பணியிடங்களுக்கு 10,+2 மற்றும் டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம் என்பது சமூகப்பாதுகாப்புடன் ஒருங்கிணைந்த பல்நோக்கு நலத் திட்டமாகும். இதன் மூலம்  தொழிலாளர் அரசு காப்பீட்டுச் சட்டத்தின் கீழ்,  விவரிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு அவ்வப்பொழுது நேரிடும் உடல்நலக் குறைபாடு, பெண் தொழிலாளர்களுக்கான மகப்பேறு, வேலை செய்யும் போது விபத்தினால் ஏற்படும் தற்காலிகமான அல்லது நிரந்தரமான ஊனம் மற்றும் மரணம் போன்ற அனைத்திற்கும் உரிய மருத்துவச்சேவை வழங்கிறது. இந்தப் பணிகள் அனைத்தையும் நிர்வகிக்க பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவருகின்றனர். தற்போது பன்முக உதவியாளர், கிளர்க், ஸ்டெனோ, உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் என்னென்ன தகுதிகள்? கொண்டிருக்க வேண்டும் என இங்கே விரிவாக தெரிந்துக்கொள்வோம்.



தொழிலாளர் காப்பீட்டு நிறுவனப்பணிக்கானத் தகுதிகள்:


மொத்த காலிப்பணியிடங்கள்: 3865


Multi Tasking Staff – 1964


Upper Division clerk – 1736


Stenographer - 165


கல்வித்தகுதி:


தொழிலாளர் காப்பீட்டு நிறுவனப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


இதோடு ஸ்டேனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து படித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், இஎஸ்ஐயில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசையில் உள்ள நபர்கள், https://ibpsonline.ibps.in/esiccsmdec21/ என்ற இணையதள பக்கத்தின் வாயிலாக முதலில் ரிஜிஸ்டர் செய்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் அதில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, கேட்கப்பட்டிருக்கும் அனைத்து விபரங்களையும் தவறில்லாமல் பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி : பிப்ரவரி 15.


விண்ணப்பக்கட்டணம் :


பொதுப்பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினருக்கு ரூ. 500 மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ரூபாய் 250 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து மற்றும் திறன் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Stenographer தேர்வில், டிக்டேஷன்: 10 நிமிடங்களில் 80 வார்த்தைகள் மற்றும் டிரான்ஸ்கிரிப்ஷன்: 50 நிமிடங்களில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மேற்கொள்ள வேண்டும்.


மேலும் ஒவ்வொரு பணிகளுக்கு ஏற்ப தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://www.esic.nic.in/recruitments/index/page:1  என்ற இணையதளத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.