ஏதேனும் ஒரு டிகிரி இருக்கா? புதுச்சேரி ஜிப்மரில் 23 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு!

ஜிப்மர் பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Continues below advertisement

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள senior Finacial advisor, Registrar, system analyst, controller of examination, Senior store officer, purchase officer, Assistant Registrar, Manager of press, computer data processor உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற பிப்ரவரி 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

Continues below advertisement

ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும்  ஜிப்மர்(Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research) புதுச்சேரியில் அமைந்துள்ளது. இந்தியாவில் தலைசிறந்த மருத்துவக்கல்லூரிகளில் ஒள்றாக இப்பல்கலைக்கழகம் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் மத்திய அரசின் உதவியோடு செயல்பட்டுவரும் இப்பல்கலைக்கழகத்தில் மருத்துவப்படிப்புகள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 150 இளநிலை மாணவர்களையும், 200 முதுகலை மாணவர்களையும் சேர்த்துக் கொள்கிறது. மேலும் இந்த பல்கலைக்கழகத்தில் சுமார் 3000 பணியாளர்களையும், பணியாளர்களையும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களையும் கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது புதுச்சேரி ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்கான தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

ஜிப்மர் பல்கலைக்கழகப் பணிக்கானத் தகுதிகள்:

மொத்த காலிப்பணியிடங்கள்: 23

கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயம் செய்யப்படவுள்ளது. ஆனால் 56 வயதிற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடமாட்டாது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு  விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://jipmer.edu.in/sites/default/files/Application%20PDY.pdf என்ற பக்கத்தில் உள்ள விண்ணப்படிவத்தை முதலில் டவுன்லோடு செய்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து அடிப்படை விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு வருகின்ற பிப்ரவரி 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

Shri Hawa Singh

 Senior Administrative Officer

 Room No. 210, II floor,

Administrative Block,

JIPMER, Dhanvantari Nagar,

Puducherry – 605 006.

தேர்வுசெய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்:

தகுதியின் அடிப்படையில் தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 29,200 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் தகவல்களை https://jipmer.edu.in/sites/default/files/Website%20Advertisement_0.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாகத் தெரிந்துக்கொள்வோம்.

Continues below advertisement
Sponsored Links by Taboola