எல்லைப்பாதுகாப்பு படையில் காலியாக உள்ள கான்ஸ்டபிள், அசிஸ்டன்ட் ஏர்கிராப்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.
இன்றைய இளைஞர்கள் பலர் இராணுவத்தில் ஏதாவது ஒரு துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் இருப்பார்கள். இவர்களின் கனவை நினைவாக்கும் விதமாகத்தான் தற்போது எல்லைப்பாதுகாப்பு படையில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய சர்வதேச எல்லைப்பகுதிகளைப் பாதுகாக்கும் மத்திய காவல் ஆயுதப்படைகளில் ஒன்றாக எல்லைப் பாதுகாப்புப் படை இயங்கி வருகிறது. இந்திய துணை ராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை கடந்த 1965 ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இதோடு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுமாக உள்ளது. இதோடு குருப் சி பிரிவின் கீழ் சமையல்பணி, டெய்லர் போன்ற பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவருகின்றனர். தற்போது இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்கான தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.
எல்லைப்பாதுகாப்பு படையில் பல்வேறு பணியிடங்களுக்கானத் தகுதிகள்:
மொத்த காலிப்பணியிடங்கள்: 195
பணியிட விபரங்கள்:
Junior Flight Engineer,
Inspector/ storeman,,
Junior aircraft Mechanic
Assistant aircraft mechanic
கல்வித்தகுதி :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஐடிஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், முதலில் https://rectt.bsf.gov.in/ என்ற இணையதளப்பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
அப்பக்கத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இதில் கேட்கப்பட்டுள்ள கல்வி சான்றிதழ், வயது வரம்பிற்கான சான்றிதழ் போன்ற அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி- ஏப்ரல் 24, 2022
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்குறித்த கூடுதல் விபரங்களை https://bsf.gov.in/Home என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.