சென்னை  துறைமுகத்தில் காலியாக உள்ள  செயற் பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.


இந்தியாவின் மிகப்பெரிய  மற்றும் முன்னணி துறைமுகங்களுள் ஒன்றாக சென்னை துறைமுகம் செயல்பட்டுவருகிறது. குறிப்பாக அண்மைக் காலங்களில் முக்கியமான கொள்கலன் துறைமுகமாக மாறியுள்ள இத்துறைமுகம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சிறப்பாக உற்பத்தித் தொழில் வளர்ச்சிக்கான முக்கியக் காரணிகளுள் ஒன்றாக விளங்கி வருகிறது.  தற்போது சிங்கப்பூர், ஆங்காங், சாங்காய் ஆகிய துறைமுகங்களுடன்  சென்னை துறைமுகத்தை ஒப்பிடும் போது இது மிகவும் சிறிய துறைமுகமாக இருப்பினும் வரும் ஆண்டுகளில் இது விரிவாக்கப்பட உள்ளது எனக் கூறப்படுகிறது.  தற்போது உலகின் 86 வது பெரிய கொள்கலன் துறைமுகமாக உள்ளது மற்றும் ஆண்டுக்கு சுமார் 140 மில்லியன் டன்களாக இதன் திறனை விரிவுபடுத்தத் திட்டங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த சென்னை துறைமுகத்தில்  பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது செயற்பொறியாளர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கானத் தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை ? குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்



சென்னை துறைமுகத்தில் செயற் பொறியாளர் (EXECUTIVE ENGINEER) பணிக்கானத் தகுதிகள்:


மொத்த காலிப்பணியிடங்கள்: 16


கல்வித் தகுதி :


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவில் பி.இ படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.


வயது வரம்பு:


விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பளம் – மாதம் ரூபாய் 50 ஆயிரம்- 1,60,000 என நிர்ணயம்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், முதலில் https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/ee22.pdf இந்தப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதோடு, பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் எவ்வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்துக்கொண்டு, தேவையான அனைத்து ஆவணங்களுடன் வருகின்ற ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:


SECRETARY,


CHENNAI PORT AUTHORITY,


RAJAJI SALAI,


 CHENNAI – 600001


தேர்வு செய்யும் முறை: மேற்கண்ட முறைகளில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனவே ஆர்வமுள்ள பட்டதாரிகள், உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை, https://www.chennaiport.gov.in/sites/all/themes/nexus/files/pdf/CAREERS/ee22.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.