எல்லை பாதுகாப்பு படையில் (Border Security Force) காலியாக உள்ள 2788 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள ஆண் மற்றும் பெண் நபர்கள் வருகின்ற மார்ச் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
இந்திய இளைஞர்கள் பலரிடம் ராணுவத்தில் ஏதாவது ஒரு பிரிவில் சேர்ந்துப் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை அதிகளவில் இருக்கும். இந்நிலையில் தான் அவர்களின் கனவை நினைவாக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் எல்லைப்பாதுகாப்பு படை, துணை ராணுவம் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும். அதன் படி தற்போது இந்திய சர்வதேச எல்லைப்பகுதிகளைப் பாதுகாக்கும் மத்திய காவல் ஆயுதப்படைகளில் ஒன்றாக எல்லைப்பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஆண் மற்றும் பெண் இருவருக்குமான இந்த அறிவிப்பில் 2788 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கான தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.
எல்லைப்பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணியில் சேர்வதற்கானத் தகுதிகள்:
மொத்த காலிப்பணியிடங்கள் – 2788
ஆண்கள் – 2651
பெண்கள் – 137
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / வாரியத்தில் இருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 1 , 2021 தேதியின் படி 18 வயது முதல் 23 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://rectt.bsf.gov.in/ என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் ஆன்லைன் மூலம் மார்ச்1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
UR/General/EWS category/OBC பிரிவினருக்கு ரூ. 100 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதர பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் எதுவும் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உடற்தகுதி, உடல் திறன் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு, வர்த்தகத்தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் மருத்துவத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்- மாதம் ரூ. 21,700 முதல் ரூ. 69,100 என நிர்ணயம்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://rectt.bsf.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.
இந்திய துணை ராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை கடந்த 1965 ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இதோடு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.