தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள சிஸ்டம் புரோகிராமர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற ஜனவரி 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.


நாகப்பட்டினம் மாவட்டத்தில், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகச் சட்டம் 2012 இன்படி, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலிலதா மீன்வளப்பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நாகப்பட்டினம் மீன்வளப்பல்கலைக்கழகத்தில் மீன்வள அறிவியல்,  மீன்வளப் பொறியியல், உயிர்தொழில்நுட்பவியல், உணவு தொழில்நுட்பவியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல், வணிக நிர்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) ஆகிய நான்காண்டு கால இளநிலை பட்டப்படிப்புகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மேலும், தொழில்சார் மீன்பதன நுட்பவியல், தொழில்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் இளநிலை நீர்வாழ் உயிரின மேலாண்மை ஆகிய பாடப்பிரிவுகளில் மூன்று ஆண்டுகால இளநிலைப் படிப்புகள் தொழிற்கல்வியாக வழங்கப்படுகின்றன.



மேலும் இப்பல்கலைக்கழகத்தில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச்சேர்ந்த மாணவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இதோடு மீன்வளத்துறையின் உள்ள தொழில்நுட்பங்களை பயிற்றுவிப்பதாக பல தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இப்பல்கல்கலைக்கழகத்தில் பணியாற்றிவரும் நிலையில், தற்போது தற்காலிக அடிப்படையில் சிஸ்டர் புரோகிராமர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களை நிரப்புவதற்கு எவ்வித எழுத்துத்தேர்வு எதுவும் கிடையாது. ஆனால் நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேறு என்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்


தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழத்தில் சிஸ்டம் புரோகிராமர் பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் – 1


கல்வித்தகுதி :


விண்ணப்பதாரர்கள் MCA/M.Sc (IT)/M.Sc (Computer Science)/ படித்திருக்க வேண்டும்.


இதோடு வெப் டிசைனிங், Java, HTML போன்றவற்றில் 3 ஆண்டு  பணி புரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு :  விண்ணப்பதார்கள் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


பணி விபரம்:


மீன்வளப்பல்கலைக்கழகத்தில் சிஸ்டம் புரோகிராமர் பணிக்கு தேர்வாகும் நபர்கள், இங்கு நடைபெறும் ஆன்லைன் தேர்வு, கேள்வித்தாள் டைப்செய்வது, பல்கலைக்கழகத்திற்கான வெப் டிசைனிங் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், பணிபுரிய ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்க விரும்பினால், தங்களது சுய விபரங்களை கீழ்வரும் முன்னஞ்சல் முகவரிக்கு வருகின்ற ஜனவரி 24 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


மின்னஞ்சல் முகவரி: ce@tnjfu.ac.in


தேர்வு செய்யும் முறை:


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்படுவார்கள்.


சம்பளம் : ரூ. 22,000 என நிர்ணயம்


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://drive.google.com/file/d/1pB_Kv0eNJJs1ENI5pcd05BBLI_jN2tJg/view என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.