மத்திய அரசின் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் அமைச்சகதின் கீழ செயல்பட்டு வரும் தேசிய தர நிர்ணய கழகத்தில் (Bureau of Indian Standards) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது. புதுடெல்லியில் அமைந்துள்ள  தர நிர்ணய கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விருப்பமுள்ள உள்ள பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 பணி விவரம்:


 Scientist-‘B’,  விவசாய துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர் (Agriculture Engineering , Bio-Medical Engineering ,  Chemistry, Computer Engineering , Electrical Engineering, Environment Engineering உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஊதியம்:


இந்தப் பணியிடங்களுக்கு மாதம் ரூ.99,969 ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


வயதுவரம்பு:


26.08.2022 தேதியின்படி, 21 வயது முதல் 30 வயதிற்குள்ளவர்களாக இருப்பது அவசியமாகிறது.


கல்வித் தகுதி:


Section -B விஞ்ஞானிகளுக்கு வேதியியல் பாடப்பிரிவில் முதல் வகுப்பில் எம்.எஸ்.சி. தேர்ச்சி பெற்று GATE-2020,2021,2022 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.




மற்ற பணியிடங்களுக்கு பி.இ அல்லது பி.டெக் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் GATE-2020,2021,2022 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படுவது எப்படி?


2020,2022, 2021, GATE தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.


எப்படி விண்ணப்பிப்பது?


www.bis.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2022


மேலும் விவரங்கள் அறிய https://www.bis.gov.in/wp-content/uploads/2022/08/1-Detailed-Advetisement-English-29-07-22.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.




மேலும் வாசிக்க: நடு வானில் பறந்த விமானம்! அசந்து தூங்கிய விமானிகள்.. பதறிய அதிகாரிகள்! பகீர் சம்பவம்!!


மேலும் வாசிக்க:ICFRE: மத்திய அரசின் வன ஆராய்ச்சி துறையில் காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பிக்கவும்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண