உலகில் அவ்வப்போது, மோசமான மற்றும் உலகையே சோகத்தில் ஆழ்த்தும் விமான விபத்துகள் நடந்திருக்கிறது. இப்படியான விபத்துகள் எல்லாம் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறால் என்பது, விமான விபத்திற்குப் பின்னர், விமானத்தின் கருப்புப் பெட்டியை ஆய்வு செய்து கண்டுபிடித்துச் செல்லப்படும். அதேநேரத்தில் ஒரு சில வீடியோ காட்சிகளையும், செய்திகளையும் கூட நாம் பார்த்திருப்போம், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்பது மாதிரியான செய்திகளில் இன்றைக்கு ஒரு நிகழ்வு இணைந்துள்ளது. குறிப்பாக, ஒரு பெரும் நாசகர சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த நிகழ்வில் விபத்து ஏற்பட காரணம் தொழில் நுட்பக் கோளாறு இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும். 


சூடான் நாட்டில் இருந்து எத்தியோபியாவிற்கு ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. இந்த விமானத்தில் 737 பயணிகள் பயணம் செய்து கொண்டு இருந்துள்ளனர். குறிப்பாக இந்த விமானம் சூடானின் கார்டூமில் நகரில் இருந்து, எத்தியோபியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவிற்கு பறந்து சென்றுள்ளது. இந்த விமானம் ET343 விமானம் என அழைக்கப்பட்டு வருகிறது.


 

சம்பவம் நடந்த ஆகஸ்ட் மாதம் கடந்த 15 தேதியன்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு ET343 விமானம் வானில் பறந்து கொண்டு இருந்தது. விமானம் தரை இறங்கவேண்டிய இடம், எத்தியோபியாவின் தலைநகரான அடிஸ் அபாபாவிற்கு அருகில் வந்ததும், விமான நிலையத்தில் இருந்து, விமானத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், விமானத்தில் இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. இதனை சுதாரித்துக் கொண்ட விமான நிலைய ஊழியர்கள், அச்சம் அடைந்தனர். 





 

விமானத்தில் இருந்த இரண்டு ஃபைலைட்டுகளும் தூங்கிவிட்டு, ஆட்டோ ஃபைலைட் மோடில் விமானத்தினை இயக்கியுள்ளனர். மிகவும் பாதுகாப்பாக சென்று கொண்டு இருந்த விமானம், தரையிறங்கும் பகுதி வந்ததும், என்ன செய்வது எனத் தெரியாமல் வானிலேயே சுற்றிக்கொண்டு இருந்துள்ளது. விமான நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்ட தகவலால், விமானத்தில் ஆபத்து காலத்தில் ஒலிக்கச் செய்யும் அலாரம் ஒலிக்கப்பட்டிருக்கிறது. இதனால் 737 பயணிகளும் பீதி அடைந்துள்ளனர். விமானத்திற்குள் இப்படி நடக்கும் போது விமானம், 37,000  அடி உயரத்தில் பறந்து கொண்டு இருக்கிறது. இதனால், சுமார் 25 நிமிடங்கள் வானத்தில் வட்டமிட்டபடி விமானம் இருந்துள்ளது. பின்னர் தரையிறக்கப்பட்ட் விமானம், சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு தான் இயக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து, பிரபல விமான ஆய்வாளர் அலெக்ஸ் மாச்செரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், விமானிகளுக்கு சோர்வு என்பது இயல்பான விசயம் தான் என கூறியுள்ளார். இவர் ஏற்கனவே லண்டனின் ஓய்வு நேர விமான நிறுவனமான ஜெட்2 நிறுவனம், விமானிகளின் ஓய்வு நேரம் பற்றிய கவலைகளை புறக்கணித்ததிற்கு மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். எத்தியோபியாவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த விதமான காயமோ அசம்பாவிதமோ ஏற்படவில்லை என விமான நிலையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.