அரசு காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.யின் ஆயுள் காப்பீடு கழகத்தின் (Life Insurance Corporation ) கீழ் செயல்பட்டு வரும் வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் (LIC Housing Finance Limited ) உள்ள உதவியாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி:  உதவியாளர் (Assistant)

பணியிடங்கள்: 50

ஊதியம்:

உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.22,730 வழங்கப்படுகிறது.

வயதுவரம்பு:

இந்தப் பணியிடங்களுக்கு 21 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

இளங்கலை படிப்பின் ஏதாவது ஒருப் பிரிவில்  55 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

பணி:  உதவி மேலாளர் (Assistant Manager)

பணியிடங்கள்: 30

சம்பளம்:

உதவி மேலாளர் பணிக்கு மாதம் ரூ.53,620 ஊதியம் வழங்கப்படும்.

வயதுவரம்பு:

21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 

இளங்கலை படிப்பில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இப்பணியில் டி.எம்.இ. பிரிவிற்கு 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். சந்தையியல், நிதியியல் பிரிவில் எம்.பி.ஏ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.800 விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி:

 www.lichousing.com என்ற வலைதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணபிக்க கடைசி தேதி: 25.08.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.lichousing.com/static-assets/pdf/Detailed%20Advertisement.pdf?crafterSite=lichfl-corporate-website-cms&embedded=true

என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தையும் அறிந்துகொள்ளலாம். 

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண