BHEL Recruitment 2023


திருச்சியில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பி.ஹெச்.இ.எல்.) நிறுவனத்தில் தொழில் பழகுநர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.. மொத்தம் 680 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட  உள்ளன.


பணி விவரங்கள்:


Graduate Apprentice,Technician Apprentice ,Trade Apprentice உள்ளிட்ட பிரிவுகளில் தகுதியானவர்களுக்கு வேலை வழங்கப்பட உள்ளது.


Graduate Apprentice - 179


Technician Apprentice- 398


Trade Apprentice -103


மொத்த பணியிடம் - 680


ஊதிய விவரம்:


Graduate Apprentice - ரூ.9,000/-


Technician Apprentice- ரூ.8,000/-


Trade Apprentice -ரூ.7,700 - ரூ.8,050/-


தேர்வு செய்யப்படும் முறை:


எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.


கல்வித் தகுதி:


விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, இளங்கலை பட்டம், டிப்ளமோ, ஐ.டி.ஐ உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  10+2 என்ற முறையில் பள்ளி படிப்பை முடித்திருக்க வேண்டும். 


70% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்,.


வயது வரம்பு:


27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 01.12.2023


அதிகாரப்பூர்வ இணையத முகவரி- https://www.apprenticeshipindia.gov.in/



எப்படி விண்ணப்பிப்பது?


 விண்ணப்பதாரர்கள் BHEL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.apprenticeshipindia.gov.in/ கிளிக் செய்யவும், 


 ஹோம் பக்கத்தில் உள்ள மெனு பிரிவுகளில் "careers" என்பதை கிளிக் செய்யவும்.


அடுத்து“BHEL Apprentice Recruitment 2023” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.


உங்களது விவரங்களை பூர்த்தி செய்து உடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி submit button- ஐகிளிக் செய்யவும்.


அறிவிப்பின் முழு விவரத்திற்கான லிங்க் - https://trichy.bhel.com/tms/app_pro/Graduate_App.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.