தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை உதவி அலுவலர் நிலையில் மொத்தம் 263 பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு இன்று முதல் டிசம்பர் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கத் துறையில் உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை துணைப் பணியில் உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகிய பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


டிசம்பர் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


இந்தப் பணிகளுக்கு இன்று முதல் டிசம்பர் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள டிசம்பர் 29 நள்ளிரவு 12.01 முதல் டிசம்பர் 31 இரவு 11.59 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


பிப்ரவரி 7ஆம் தேதி இதற்கான தேர்வு கணினி முறையில், இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெற உள்ளது. காலையில் 9.30 முதல் 12.30 மணி வரை டிப்ளமோ தரத்தில், பாடம் சார் தேர்வுகள் நடைபெற உள்ளன. மதியம் 2.30 முதல் 5.30 மணி வரை இரண்டு பிரிவுகளாகத் தேர்வு நடைபெறும். குறிப்பாக தமிழ் மொழி தகுதித் தேர்வும் பொதுப் பிரிவுக்கான தேர்வும் நடைபெற உள்ளது.


வயது வரம்பு


18 வயது முதல் 32 வயது வரையிலான நபர்கள் இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். எனினும் எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி முஸ்லிம்கள் மற்றும் ஆதரவற்ற கைம்பெண்களுக்கு வயது வரம்பு எதுவும் இல்லை.


பணியிடங்கள்


உதவி வேளாண்மை அலுவலர் -79+ 5


உதவி தோட்டக்கலை அலுவலர் – 148 + 31


மொத்தம் - 263 பணியிடங்கள்


ஊதியம் – ரூ.20,600 – ரூ.75,900 வரை


விண்ணப்பக் கட்டணம்


டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுத ஒரு முறை விண்ணப்பப் பதிவு (One Time Registration) செய்ய வேண்டியது அவசியம். இதற்கு ரூ.150 செலுத்த வேண்டும். ஒரு முறை பதிவு செய்தால், 5 ஆண்டுகளுக்கு முன்பதிவு செல்லுபடியாகும்.


தொடர்ந்து தேர்வுக்கான கட்டணமாக ரூ.100-ஐச் செலுத்த வேண்டும். இதில் எஸ்சி/ எஸ்சி அருந்ததியர்கள் / எஸ்டி, கைவிடப்பட்ட கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கட்டணம் எதையும் செலுத்த வேண்டியதில்லை.


இதற்காக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.


விண்ணப்பிப்பது எப்படி?


முதலில் தேர்வர்கள் ஒரு முறை பதிவு செய்துகொள்ள வேண்டும்.


தொடர்ந்து https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வர்கள் முழுமையான விவரங்களைப் பெற https://www.tnpsc.gov.in/Document/english/26_2023-English.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம். 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணைய முகவரி https://www.tnpsc.gov.in/