BHEL Recruitment 2022 :
திருச்சியில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பிஹெச்இஎல்) நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை. மொத்தம் 575 காலிபணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணி விவரங்கள்:
Graduate Apprentice,Technician Apprentice ,Trade Apprentice உள்ளிட்ட பிரிவுகளில் தகுதியானவர்களுக்கு வேலை வழங்கப்பட உள்ளது.
ஊதிய விவரம்:
ரூ. 7700 முதல் ரூ.9000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, இளங்கலை பட்டம், டிப்ளமோ, ஐ.டி.ஐ உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 07.09.2022
அதிகாரப்பூர்வ இணையத முகவரி- https://www.apprenticeshipindia.gov.in/
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் BHEL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.apprenticeshipindia.gov.in/ கிளிக் செய்யவும்,
ஹோம் பக்கத்தில் உள்ள மெனு பிரிவுகளில் "careers" என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்து“BHEL Apprentice Recruitment 2022” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
உங்களது விவரங்களை பூர்த்தி செய்து உடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி submit button- ஐகிளிக் செய்யவும்.
அவ்வளவுதான்.
அறிவிப்பின் முழு விவரத்திற்கான லிங்க்:
https://trichy.bhel.com/tms/app_pro/APP_Graduate_%202022.pdf
https://trichy.bhel.com/tms/app_pro/APP_Trade_2022.pdf
https://trichy.bhel.com/tms/app_pro/APP_Tech_%202022.pdf
GATE 2023 Exam: பொறியியல் Gate தேர்வு தேதிகள் அறிவிப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்... பள்ளிகளுக்கு கட்டணம் குறைப்பு - முழு விவரம்!