கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் பள்ளிக்கல்வித்துறை கல்விக் கட்டணத்தை குறைத்து நிர்ணயித்துள்ளது. கடந்த கல்வியாண்டில் வழங்கப்பட்டதை விட, பள்ளிகளுக்கான கட்டணம் குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அதன்படி கடந்த கல்வியாண்டில் LKG, UKG, 1ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.12,458.94 என்று இருந்த கட்டணம் இந்த ஆண்டில் ரூ.12.076.85 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல்,


"2ஆம் வகுப்பு மாணவருக்கு ரூ.12.449.15 என்று இருந்தது ரூ.12,076.85 


3ஆம் வகுப்பு மாணவருக்கு ரூ.12,578.98 என்று இருந்தது ரூ.12,076.85 


4ஆம் வகுப்பு மாணவருக்கு ரூ.12,584.83 என்று இருந்தது ரூ.12,076.85 


5ஆம் வகுப்பு மாணவருக்கு ரூ.12,831.29 என்று இருந்தது ரூ.12,076.85


6ஆம் வகுப்பு மாணவருக்கு ரூ.17,077.34 என்று இருந்தது ரூ.15,711.31 


7ஆம் வகுப்பு மாணவருக்கு ரூ.17.106.62 என்று இருந்தது ரூ.15,711.31 


8ஆம் வகுப்பு மாணவருக்கு ரூ.17,027.35 என்று இருந்தது ரூ.15,711.31” எனக் குறைக்கப்பட்டுள்ளது.


கல்விக் கட்டணத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு முன்னதாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், கட்டணத்தை குறைத்து பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இலவச கட்டாயக் கல்வி சட்டம்


இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. நாடு முழுவதும் 2010-ஆம் ஆண்டு இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. தமிழக அரசு கடந்த 2011ஆம் ஆண்டு  கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தியது.


இந்த 25 சதவீத இட ஒதுக்கீட்டில் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள், எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்பது தொடர்பான விவரங்களைப் பொதுவெளியில் தனியார் பள்ளிகள் அறிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பெற்றோர் மத்தியில் பரவலாக எழுந்தது. செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே சிறப்பு ஒதுக்கீட்டில் இடம் கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


இந்த சூழலில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்ப முறை 2017-ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது.


சட்டப்படி சேர்க்கை கோரும், குழந்தைகளின் பெற்றோர் பள்ளி கல்வித்துறையின் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால் பெற்றோருக்கு ஒப்புகை சீட்டை தவறாது வழங்க வேண்டும்.


விண்ணப்பங்களைப் பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம். இதுதவிர, முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.


பெற்றோர்கள் விண்ணப்பிக்க rte.tnschools.gov.in என்ற இணையதளத்தை க்ளிக் செய்யவும்.


இலவச, கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்படி சேர்க்கை வழங்கும் தனியார் பள்ளிகளின் விவரங்களைக் காண: https://rte.tnschools.gov.in/rte-schoollist 


கூடுதல் விவரங்களுக்கு: https://rte.tnschools.gov.in/moredetails


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண