பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (bharat heavy electricals limited) நிறுவனம் மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவரும் மிகப்பெரிய உற்பத்தி துறை நிறுவனமாகும். ராணிப்பேட்டையில் செயல்பட்டு வரும் பாயிலர் அக்ஸீலியர்ஸ் பிளான்ட் (Boiler Auxiliaries Plant (BAP)) -ல் Project Work / Internship செய்வதற்கான வாய்ப்பு குறித்து அந்நிறுவனம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.


இதற்கு 2022- 2023 ஆம் ஆண்டு படித்து கொண்டிருக்கும் மாணவர்கள் தகுதி உடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி:


இந்தப் பயிற்சி திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இறுதி செமஸ்டரில் படிப்பவர்களாக இருக்க வேண்டும். 


B.E., B.Tech., MBA, MCA., M.E., M.Tech., ஆகிய படிப்புகள்/ துறைகளைச் சேர்ந்த மாணவர்களாக இருக்க வேண்டும். 


பயிற்சி காலம்:


இந்தப் பயிற்சி வரும் டிசம்பர் முதல் அடுத்தாண்டு மே மாதம் வரை வழங்கப்படுகிறது. 


கால அளவு: குறைந்தபட்சம் நான்கு வாரங்கள் முதல் அதிகபட்சம் 24 வாரங்கள் (2 ஆண்டுகள்) வரை பயிற்சி காலம் ஆக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


பயிற்சி நேரம்: 


திங்கள் கிழமை முதல் எல்லா பணி நாட்களிலும் மதியம் 1 மணி முதல் 4.30 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. 


கட்டணம்:


BHEL Employee Wards-களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. மற்றவர்களுக்கு வரித் தொகையுடன் சேர்த்து ரூ.885 (அதாவது ரூ.750+18% S.T. ) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


கட்டணத்தை ஆன்லைனில் SBI Collect மூலம் செலுத்த வேண்டும். 


கவனத்தில் கொள்ள வேண்டிய சில விதிமுறைகள்:


பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனத்தின் வளாகத்திற்குள்  கைப்பேசி / ஸ்மாட்ஃபோன் ஆகியவற்றைக் கொண்டு செல்ல அனுமதி கிடையாது.


பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், Formal Dress Code-ல் மட்டுமே பயிற்சிக்குச் செல்ல வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.


அனுமதி கடிதம்:


கல்வி நிறுவனத்தில் இருந்து சமர்ப்பிக்கப்படும் கடிதம் கல்லூரி முதல்வர்/ துறை தலைவர்/ Dean ஆகியோரின் கையெழுத்துடன் அவர்களின் அதிகாரப்பூர்வ சீல் உடன் இருக்க வேண்டும். 


'The Deputy Manger, HRDC, BHEL, Ranipet-6 ' என்ற பெறுநர் முகவரிக்கு அனுமதி கடிதம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். 


பயிற்சி அனுமதி கடிதத்துடன், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். 


இந்நிறுவனத்திற்குள் செல்வதற்கு அங்கிருக்கும் Internal Guide allathu Human Resource Developement Centre -இன் முன் அனுமதி அவசியம். 


Stamp Size போட்டோ, பாஸ்போர்ட் அளவிலான போட்டோ ஆகியவற்றில் ஒன்றை பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும்போது சமர்ப்பிக்க வேண்டும். 


இந்தப் பயிற்சிக்கு தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுப்பதில்  Human Resource Developement Centre -ன் முடிவு இறுதியானது. 


பயிற்சி காலத்தில் உதவித் தொகை வழங்கப்படுமா? விண்ணப்பிக்க கடைசி தேதி இருக்கிறதா? உள்ளிட்ட சந்தேகங்கள் இருப்பின் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். 


கூடுதல் தகவல்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பின் விவரத்தை காணலாம்.




 


 


தொடர்புக்கு- 04172 - 284238 
                          - 04172-284543


 


முகவரி:


Boiler Auxiliaries Plant,


Indira Gandhi Industrial Complex,


Ranipet-632406, Vellore Dist. (Tamil Nadu), India.