NABARD Recruitment 2022: விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியில் (National Bank For Agriculture And Rural Development – NABARD) காலியாக உள்ள Senior Project Assistant பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் மும்பையில் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பணி விவரம்:


Senior Project Assistant 


கல்வித் தகுதி:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க கம்யூட்டர் அறிவியல் துறையில் பொறியியல் அல்லது அதற்கு சமமான தொழில்நுட்ப துறையில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 50 சதவீத மதிப்பெண் வைத்திருக்க வேண்டும். 


NBFCs/ large sized NGOs/ MFIs/ civil society organizations/Start-Ups or other similar
organizations உள்ளிட்ட துறைகளில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.


ஆங்கில மொழியில் எழுத, படிக்க, பேச நன்றாக தெரிந்திருக்க வேண்டும். 


வளர்ச்சி துறையில் திட்டப் பணிகளை மேற்கொண்ட அனுபவம் இருப்பில் கூடுதல் சிறப்பு.  


ஊதிய விவரம்:


இந்தப் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.80,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி திறன் அடிப்படையில் 10 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்படும். 


மேலும், பணி நிமிர்த்தமாக பயணங்கள் மேற்கொள்ளும்போது, அதற்கான செலவுகளையும் நிறுவனமே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 28 வயது நிரம்பியவராகவும், 50 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.


பணி ஒப்பந்தம்:


இந்தப் பணிக்கு மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பணி திறமையின் அடிப்படையில், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பணி ஒப்பந்தம் நீடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இரண்டு மாதங்கள் நோட்டீஸ் காலம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எப்படி விண்ணப்பிப்பது?


இதற்கு விண்ணப்பிக்க விரும்புவவோர் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdGHMiMTHi7ANRSbKbSZdLxD0bYrNn4Gbbdm8-R1p_WErdqfQ/viewformஎன்ற கூகுள் ஃபார்ம் மூலம் விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.12.2022


கூடுதல் தகவலுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.nabard.org/க்கு சென்று பார்க்கவும்.


கவனிக்க:


தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும். விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொடர்பு எண்ணை விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.


முகவரி:


 2nd Floor, 'D' Wing C-24, 'G' Block,


Bandra Kurla Complex Rd,


Bandra East, Mumbai, Maharashtra 400051


தொடர்பு எண்: 022-26539895/96/99 




Kanavu Illam Scheme: எஸ்.ரா., சு.வெ., வண்ணதாசன் உள்ளிட்ட 10 தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடு- தமிழக அரசு அதிரடி உத்தரவு