திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 4 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
தமிழ்நாட்டில் செயல்படக்கூடிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் கடந்த 1982-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதிதாசனின் பொன்மொழிகளை ஏற்று செயல்பட்டு வரக்கூடிய பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகள் செயல்பட்டுவருகிறது. மேலும் இதில் அனுபவம் வாய்ந்த பல்வேறு பேராசிரியர்கள் பணியாற்றி வரக்கூடிய நிலையில் தற்போது Research Fellowship, மற்றும் Guest Lecturer பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இந்நேரத்தில் இப்பணிக்கான தகுதிகள் என்ன? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Research Fellowship, Guest Lecturer பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் – 4
கல்வித்தகுதி :
Research fellowship பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்களில் பி.எச்டி முடித்திருக்க வேண்டும்.
அதேபோன்று Guest Lecturer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதி பெற்றப் பல்கலைக்கழகங்களில் M.Sc Chemistry மற்றும் SLET/ NET/ Ph.D முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், தங்களது சுய விபரங்கள் அனைத்தையும் எந்தவித தவறும் இல்லாமல் விண்ணப்படிவத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும். மேலும் இந்த விண்ணப்படிவத்தில் எந்தப்பணிக்கு என்பதைக் குறிப்பிட வேண்டும். மேலும் எந்தப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கிறோர்களோ? அதற்குரிய அனைத்துச்சான்றிதழ் நகலையும் விண்ணப்பத்தோடு இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை டிசம்பர் 22-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதேப்போன்று Guest Lecturer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை டிசம்பர் 15 அதாவது இன்னும் 2 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி:
Professor & Head, Department of Nonlinear
Dynamics, Bharathidasan University,
Tiruchirappalli–620 024
தேர்வு முறை:
மேற்கண்ட முறையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விபரம்:
Research fellowship பணிக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஸ்டைபன் வழங்கப்படும் எனவும், Guest Lecturer பணிக்கு அதிகபட்சமாக ரூ.16 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://drive.google.com/file/d/15TkVpZUJoAtb0J1Cmnvo_ZLYPb93kh7r/view மற்றும் https://drive.google.com/file/d/1iAoHuWdsAykRUHuTm7d7m8MS6uPG-sOg/view என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாகத் தெரிந்துக்கொள்ளலாம்.