தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 4 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள் வருகின்ற ஜனவரி 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.


தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Open University அல்லது TNOU) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அரசினால் நிறுவப்பட்டுள்ள ஓர் பல்கலைக்கழகமாக செயல்பட்டுவருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் உயர்கல்வியைத் தொடரவியலாத ,ஆதரவற்றோருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள ஆண்/பெண்களுக்காகவும் இன்னும் பிற காரணங்களுக்காக பள்ளிக்கல்வியை தொடராதவர்களுக்கும் பயன்தருமாறு இக்கல்வி நிறுவனம் நிறுவப்பட்டதோடு பல ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. இதில் பட்டயப்படிப்பு, சான்றிதழ் மற்றும் பட்டப்படிப்பு என பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பயின்றுவருகின்றனர். மேலும் தகுதியுள்ள உதவிப்பேராசிரியர்கள் இருக்கும் நிலையில் தற்போது தமிழ்நாடு திறந்தநிலைப்பல்கலைக்கழகத்தில் 4 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே இந்நேரத்தில் இப்பணிக்கான தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே முழுமையாகத் தெரிந்துக்கொள்வோம்.





தமிழ்நாடு திறந்தநிலைப்பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியர் பணிக்கானத் தகுதிகள்


காலிப்பணியிடங்கள் : 4


கல்வித்தகுதி


உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் 55 சதவீத மதிப்பெண்களுடன் மாஸ்டர் டிகிரி பெற்றிருக்க வேண்டும்.  இதோடு நெட் மற்றும்  செட் தேர்விலும் தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். இதோடு 2 ஆண்டுகள் பேராசிரியராகப்பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


தமிழ்நாடு திறந்தநிலைப்பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்  www.tnou.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.


பின்னர் விண்ணப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் எந்தவித தவறும் இல்லாமல் நிரப்பிவைத்துக்கொள்ள வேண்டும்.


இதனையடுத்து General/BC  பிரிவினருக்கு, Rs.500/- SC, ST – Rs.250/- விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான கட்டணத்தை Demand Draft எடுக்க வேண்டும். டிடி எடுக்க வேண்டிய முகவரி Tamil Nadu Open University” payable at Chennai.


மேற்கண்ட முறைகளில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜனவரி 3 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தமிழ்நாடு திறந்தநிலைப்பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி:


577, Anna Salai,


Todd Hunter Nagar,


Saidapet, Chennai,


Tamil Nadu 600015


தேர்வு முறை


தமிழ்நாடு திறந்தநிலைப்பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும்  நபர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


எனவே ஆர்வமுள்ள பட்டதாரிகள் உடனடியாக உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.


மேலும் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்புக்குறித்த கூடுதல் விபரங்களை https://tnou.ac.in/recruitment-for-the-post-of-assistant-professor-cum-co-ordinator-for-regional-centres/, மற்றும் file:///C:/Users/HP/Downloads/Eligibibility-Criteria-for-CCC-FINAL.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் அறிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.