இந்திய ராணுவத்திற்கு ஆயுதம் தயாரிக்கும் மத்திய அரசு நிறுவனமானப் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட்டில் (BHARAT DYNAMICS LIMITED) பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது குறித்த விவரத்தை காணலாம்.
இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் இந்நிறுவனத்தின் ஏதேனும் ஒரு அலுவகத்தில் பணியமர்த்தப்படுவர். ஹைதராபாத், மகாராஷ்டிரா, புது டெல்லி உள்ளிட்ட நகரங்கள் பணியிடம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
Management Trainee
எலக்ட்ரானிஸ் - 12
மெக்கானிக்கல்-10
எலக்ட்ரிகல்-3
கம்யூட்டர் சயின்ஸ்-2
Metallurgy-2
ஆப்டிக்ஸ்- 1
பிசினஸ் டெவலெப்மண்ட்- 1
நிதி துறை-3
மனித வள மேம்பாடு - 3
மொத்த பணியிடங்கள் - 37
கல்வித் தகுதி:
MT (Electronics) பணிக்கு எலெக்ரானிக் துறையில் பொறியியலில் இளங்கலை படிப்பு.
MT (Mechanical) பணிக்கு மெக்கானிகல் துறையில் பொறியியலில் இளங்கலை படிப்பு.
MT( Electrical) பணிக்கு எலெக்டிரிக்கல் துறையில் பொறியியலில் இளங்கலை படிப்பு.
MT (Metallurgy) பணிக்கு மேடாலூர்ஜி துறையில் பொறியியலில் இளங்கலை படிப்பு.
MT(Computer Science) பணிக்கு கம்பியூட்டர் துறையில் பொறியியலில் இளங்கலை படிப்பு.
MT(Optics) பணிக்கு இயற்பியல் பிரிவில் முதுகலைப் பட்டப்படிப்பு
MT(BusinessDevelopment) பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் எம்.பி.ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
MT( Finance) பணிக்கு பட்டய கணக்கர் தேர்ச்சி அல்லது எம்.பி.ஏ-வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
MT(Human Resources) பணிக்கு ஹெச்.ஆர். துறையில் எம்.பி.ஏ அல்லது Personnel Management / Industrial
Relations /Social Science /Social Welfare /Social Work துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
அறிவிப்பில் வெளியிட்ட தகவலின் படி மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகப்பட்ச வயது வரம்பு 55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்குக் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
பொதுப் பிரிவினர் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும். பழங்குடியின/பட்டியலின பிரிவினர், முன்னாள் இராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதார்கள் பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் அங்கீகரிக்கப்பட்ட இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி: https://www.i-register.co.in/akshayreg22/home.aspx
விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.11.2022
அறிவிப்பின் முழு விவரம் அறிய https://bdl-india.in/sites/default/files/2022-10/Final_MT%20Advertisement%20No.%202022-3.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.