நாகப்பட்டினத்தில்  மாவட்ட பொதுச் சுகாதாரம் பிரிவில்  உள்ள வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வட்டார கணக்கு உதவியாளர், நகர்புற துணை செவிலியர் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நாகப்பட்டினம் மாவட்ட நலச்சங்கம் வெளியிட்டுள்ளது. 


இது தற்காலிக அடிப்படையிலான வேலைவாய்ப்பு மட்டுமே என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் முறையை தெரிந்துகொள்ளுங்கள்.


பணி விவரம்:


வட்டார கணக்கு உதவியாளர் -1
நகர்புற துணை செவிலியர் -8
 பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்-2


கல்வி தகுதி:


 துணை செவிலியர் பணிக்கு 18 மாத செவிலியர் பயிற்சி அல்லது பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.


தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் பதியப்பெற்ற சான்று வைத்திருக்க வேண்டும். பணிபுரிய முழு உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.


வட்டார கணக்கு உதவியாளர் பணிக்கு இளங்கலை வணிகவியல் பட்டம் முடித்திருக்க வேண்டும். Tally பயிற்சி முடித்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். தமிழ் ஆங்கிலம் தட்டச்சு கணினி பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 


பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் பணிக்கு எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


இப்பணிகளுக்குத் தேசிய நலகுழும வழிகாட்டு நெறிமுறைகளின் படி சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை:


இப்பணிகளுக்குத் தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதார்களில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு குறித்து தகவல் அனுப்பப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:


தகுதியுடை விண்ணப்பதாரர்கள், கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதிச்சான்று, சாதிச்சான்று ஆகியவற்றின் சான்றொப்பமிட்ட நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ரூ.10க்கான தபால் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட கவருடன் பூர்த்தி செய்து கையொப்பமிட்ட விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்ப வேண்டும்.


 பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்கப்பட வேண்டும்.


 கடிதத்தின் உறையின் மேல் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர் குறிப்பிட வேண்டும்.


குறிப்பு: தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, நேர்காணல் கடிதம் அனுப்பப்படும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி (நேரிலோ/தபால் மூலமாக)


 


தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:


பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவத்துறை துணை இயக்குநர்.


துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,


மாவட்ட ஆட்சியரகம் முதல் நுழைவாயில்,


நாகப்பட்டினம் - 6110003


தொடர்புக்கு - 04365 253036.


தபால் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 25.11.2022 மாலை 5.00 மணி வரை.


அறிவிப்பின் முழு விவரம் - https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2022/11/2022111486.pdf