மும்பையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, காலி பணியிடங்கள் குறித்த அறிக்கையை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. பொது மேலாளர், மார்கெட்டிங், வணிக துறைகளில் பணியாற்ற அழைப்புவிடுத்திருக்கிறது. 

தகுதி:

1. எம்பிஏ முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும். 15+ ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். முன்னணி நிறுவனங்களின் மார்கெட்டிங் துறையில் 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

2. ஆங்கில மொழிப்புலமை கட்டாயம் அவசியம்

3. மார்கெட்டிங் சம்பந்தமாக எழுதுவது, பேசுவது, அறிக்கைகள் தயார் செய்வது ஆகியவை தெரிந்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க: ODI Captaincy: கேப்டன்சியை பகிர்ந்தளிக்கும் திட்டத்தில் பிசிசிஐ: ஒரு நாள் போட்டிக்கான் கேப்டனாக ரோஹித்!

வேலை விவரம்:

1பிசிசிஐ வாரியம் தொடர்பான மார்கெட்டிங் பணிகளை ஒட்டுமொத்தமாக மேம்படுத்துவதும், சரியான நேரத்தில் செயல்படுத்துவதும் இந்த பணியின் முக்கிய பொறுப்பாகும் 2. பிசிசிஐ பிராண்டை சந்தைப்படுத்துதல், விளம்பரங்கள் அமைப்பது ஆகியவை

இந்த வரிசையில், பிராண்டு, விளம்பரம், கமெர்சியல், டிஜிட்டல், ரெவென்யூ மற்றும் பல துறைகளிலும் பணியாற்ற வேண்டி இருக்கும் என பிசிசிஐ அறிவித்திருக்கிறது.

பணி இடம்: மும்பை

விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டியதற்கு கடைசி நாள்: டிசம்பர் 16 2021, மாலை 5 மணிக்குள்

மின்னஞ்சல் முகவரி: recruitment@bcci.tv 

பிசிசிஐ ட்வீட்:

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

முக்கியமான செய்திகள்:

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண