பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் கையெழுத்து தட்டச்சர் நிலை 3 மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ஆர்வமுமம் தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இன்றையக் காலக்கட்டத்தில் வேலை என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாகிவிட்டது. படித்துவிட்டு அரசு வேலைக்காக பல இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது அவர்களுக்கான நற்செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பெரம்பலூர் வட்டார இளைஞர்களுக்கு நல்ல பயனளிக்கும். அப்படி என்ன வேலை? எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என தெரிந்து கொள்வோம்.
பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு பணியிடங்களுக்கானத் தகுதிகள்:
கையெழுத்து தட்டசர் நிலை 3 மற்றும் தட்டச்சர் பணி:
காலிப்பணியிடங்கள் – 11
கல்வித்தகுதி: பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
இதோடு தட்டச்சு,கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2021-யின்படி விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.அதிகபட்ச வயது வரம்பு 32-க்குள் இருக்க வேண்டும்.
ஆனால் SC/ST பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரிய விரும்பமுள்ள இளைஞர்கள் முதலில், https://districts.ecourts.gov.in/Perambalur என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
பின்னர் அதில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த முழுமையான தகவல்களைப் படிக்கவும்.
இதனையடுத்து அங்கே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தைப்பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
முன்னதாக விண்ணப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்து இதனைக் கீழ்வரும் முகவரிக்கு அஞ்சல் வழியாக வருகின்ற டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
The Principal District Judge,
Perambalur District Court,
Thuraimangalam,
Perambalur-621212.
தேர்வு முறை:
மேற்கண்ட வழிமுறைகளைப்பயன்படுத்தி இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம்:
இப்பதவிகளுக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சமாக ரூ.19,500 முதல் அதிகபட்சம் 65,500 வரை சம்பளம் வழங்கப்படும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே பத்தாம் வகுப்பு படித்திருக்கிறோம்? நமக்கு என்ன வேலை கிடைக்கப்போகிறது என்ற எந்த வருத்தமும் தேவையில்லை. நீங்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப் ரைடிங் முடித்திருந்தால் போதும் உங்களுக்கு நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு காத்துள்ளது. இந்த அறிவிப்பை முழுமையாகப் படித்து விரைந்து மேற்கண்ட பணியிடங்களுக்கு இளைஞர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.