ராணுவ மருத்துவமனையில்  காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குறைந்தபட்ச கல்வித்தகுதியுடன் மருத்துவமனையில் பணிபுரிந்த முன் அனுபவம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.


இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஆயுதப்படை பணியாளர்கள், ராணுவக்குழுக் காப்பீடு மற்றும் ஆயுதப்படை குழுக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோய்களுக்காக குறிந்த செலவில் சிகிச்சைப் பெற்றுக்கொள்ளும் வகையில், முன்னாள் ராணுவ மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இந்தியா முழுவதும் பல இடங்களில் ராணுவ மருத்துவமனையில் செயல்பட்டுவரக்கூடிய நிலையில், தற்போது ஹைதராபாத் ராணுவ மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளர் போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்னத் தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.



ராணுவ மருத்துவமனையில் காலிப்பணியிட விபரங்கள்:


பணி -Ward Sahayika


மொத்த காலிப்பணியிடங்கள் – 51


கல்வித்தகுதி:


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பத்தாம்  வகுப்பு தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


பணி : சுகாதார ஆய்வாளர் ( Health Inspector)


மொத்த காலிப்பணியிடங்கள் – 19


கல்வித்தகுதி:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு  தேர்ச்சியுடன் சுகாதார ஆய்வாளர் பணிக்கான படிப்பை முடித்திருப்பதுடன் ஒராண்டு பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.


வயது வரம்பு:


விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள் முதலில், www.davp.nic.in/writeReadData/ADS/eng_10604_11_003_2122b.pdf  என்ற இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.


மேலும் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:


The commandant,


Command  Hospital (WC)


Chandimandir,


Panchukula,


Haryana – 134107


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி – மே 15, 2022


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பளம் :


இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மத்திய அரசு விதிமுறைகளின் படி சம்பளம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


எனவே ஆர்வமுள்ள பட்டதாரிகள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெற்றுக்கொள்ளுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ராணுவ மருத்துவமனை வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, www.davp.nic.in/writeReadData/ADS/eng_10604_11_003_2122b.pdf   என்ற இணையதள அறிவிப்பின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.