பேங்க் ஆப் பரோடா வங்கியின் மண்டல அலுவலகங்களில் காலியாக உள்ள 26 மார்க்கெட்டிங் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பாங்க் ஆப் பரோடா வங்கி ( Bank of Baroda)  என்பது இந்தியாவில் பரோடாவினை மையமாகக்கொண்டு செயல்பட்டுவரும் பொதுத்துறை வங்கியாகும். இவ்வங்கி தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் 3082 கிளைகளுடன் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது இவ்வங்கியில் வேளாண் விற்பனை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.





பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலிப்பணியிட விபரங்கள்:


பணி – Agricultural Marketing officers


மொத்த காலிப்பணியிடங்கள் - 26


மண்டல வாரியாக காலிப்பணியிட விபரங்கள்:


பாட்னா – 4


சென்னை – 3


மங்களுரு – 2


டெல்லி – 1


ராஜ்கோட்- 2


 சண்டிகர் – 4


எர்ணாகுளம் – 2


கொல்கத்தா- 3


மீரட் – 3


அகமதாபாத் – 2


கல்வித்தகுதி :


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் விவசாயம், தோட்டக்கலை, கால்நடை, பால், மீன்வளம் அறிவியல் போன்ற ஏதாவதொரு துறையில் 4 ஆண்டுகள் இளநிலைப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.


 இது மட்டுமில்லாமல் விண்ணப்பதார் விவாயம் சார்ந்த துறைகளில் பணிபுரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள  நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், www.bankofbaroda.co.in என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்னதாக கல்வித்தகுதி, அனுபவ சான்றிதழ் போன்ற அனைத்து சான்றிதழ்களையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்துக்கொள்ள வேண்டும்.


இறுதியில் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறுகள் உள்ளதா? என்பதை சரிப்பார்த்த பின்னர் விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப  வேண்டிய கடைசி தேதி – ஏப்ரல் 30, 2022


தேர்வுசெய்யும் முறை:


இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களின் கல்வித்தகுதி மற்றும்  அனுபவத்தின் அடிப்படையில்  தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பளம்:


இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.


எனவே ஆர்வமுள்ள பட்டதாரிகள் மிஸ் பண்ணாமல் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை,  www.bankofbaroda.co.in என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.