அஞ்சல் துறை:


இந்திய அஞ்சல் துறையில் (India Post Office) காப்பீட்டு விற்பனை பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு சென்னையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் வரும் திங்கள்கிழமை (ஜனவரி,23, 2023) நேர்காணல் நடைபெற உள்ளது.


சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய கோட்டம் அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு / கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை செய்யும் நேரடி முகவர்களை (Direct Agents for sale of Postal Life Insurance / Rural Postal Life Insurance products) தேர்ந்தெடுக்க  நாளை மறுநாள் (ஜனவரி 23ம் தேதி)
நேர்காணல் நடைபெற இருக்கிறது. வேலை தேடுபவர்கள், காப்பீட்டு முகவர்களாக பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம்.


பணி விவரம்: 


ஆயுள் காப்பீட்டு / கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை செய்யும் நேரடி முகவர்கள்


கல்வி மற்றும் பிற தகுதிகள்:
 
இதில் பங்கேற்க குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. 



  • ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் இருப்பவர்களுக்கு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும்.

  • கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 

  • விண்ணப்பதாரர்கள் தாங்கள் வசிக்கும் சொந்த பகுதி பற்றி நன்கு அறிந்தவர்களாக இருக்க வேண்டும்.

  • சென்னை மாநகராட்சியில் வசிப்பவராக இருப்பது அவசியம். 

  •  இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • சுய தொழில் செய்பவர்கள்,  ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.


ஊதிய விவரம்: 


இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் தங்களின் பணித்திறன் (பாலிசியின் பிரீமியம் அடிப்படையில்) ஊக்கத்தொகை அல்லது கமிஷன் மட்டுமே வழங்கப்படும்.


வயது வரம்பு:


இதில் பங்கேற குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்தவர்களாக இருக்க வேண்டும். 50 வயது மேற்பட்டவராக இருக்கக் கூடாது. 


குறிப்பு:


நேர்காணலுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்:


மூன்று புகைப்படம் (பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் -வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்று ஆகிவைகள்..


இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய் தேசிய சேமிப்பு பத்திரம்(NSC) அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை (KVP) பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேர்காணல் நடைபெறும் நாள் : ஜனவர்-,23,2023 / காலை 10 மணி முதல்


நேர்காணல் நடைபெறும் இடம்:


எண் 2, சிவஞானம் சாலை,


தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகம்.