ஆவடி கனரக வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் (Combat Vehicle Research and Development Establishment) தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 2021,2022 மற்றும் 2023-ல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (18.04.2024) கடைசி நாளாகும்.


இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு..






பயிற்சி விவரம்:


இந்த மையத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் டிப்ளமோ படித்தவர்கள் என இரண்டு பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகிறது. கம்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிஸ் பொறியியல், எலக்ட்ரானிஸ் அண்ட் கம்யூனிகேசன், மெக்கானிக்கல், நூலக அறிவியல், ஆட்டோமொபைல் ஆகிய பொறியியல் துறையில் இளங்கலை படித்தவர்களுக்கும், டிப்ளமோ படித்தவர்களுக்கும் தொழில்பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது.


இது ஓராண்டுகால அடிப்படையிலான தற்காலிக பயிற்சி வாய்ப்பு மட்டுமே. இதன் மூலம் நிரந்தர வேலைவாய்ப்பு ஏதும் கிடைக்காது என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 60 பணியிடங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 


கல்வித் தகுதி:


அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் Degree in Engineering or Technology படித்திருக்க வேண்டும். டிப்ளமோ பிரிவிற்கு பொறியியல் துறையில்ஐ.டி.ஐ. டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.


ஊக்கத்தொகை: 


COPA, CARPENTER& WELDERR - ரூ.7,700 மற்ற பணியிடங்களுக்கு ரூ.8050/- மாத ஊக்கத்தொகையாக வழங்கப்படும். 


வயது வரம்பு:


இந்தப் பயிற்சிக்கு ’Apprenticeship Rules’- படி வயது வரம்பு பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்வு செய்யப்படும் முறை:


இந்த பணியிடங்களுக்கு டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முதலில் http://www.mhrdnats.gov.in/ என்ற அப்ரண்டிஸ் இணையதளப் பக்கத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.


பின்னர், அதே இணையதளத்தில் “COMBAT VEHICLES RESEARCH AND DEVELOPMENT ESTABLISHMENT”என்பதை தேர்வு செய்து தேவையான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதில் தமிழ்நாடு என்பதை மறக்காமல் தேர்வு செய்யவும்.


 ஊக்கத்தொகை விவரம், இருப்பிட வசதி விவரம், பயிற்சி காலம் நீட்டிக்கப்படுமா உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் குறித்து அறிய https://www.drdo.gov.in/drdo/sites/default/files/career-vacancy-documents/advtcvrdeApp28032024.pdf-என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை அறிந்து கொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.04.2024