அக்னிவீரர் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு நேரடி ஆள்சேர்ப்பு முகாம் நடக்கிறது. அதையொட்டி, கடலூரில் அடுத்தாண்டு (2024) ம் ஆண்டு ஜனவரி,4 முதல் 13-ம் தேதி வரை இராணுவ வேலைவாய்ப்பு உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது. 


தேர்வு நடைபெறும் இடம்:


அண்ணா மைதானம், கடலூர்.


நாள்- ஜனவரி,4 - ஜனவரி,13 2024


இந்தாண்டு பிப்ரவரி மாதம், அக்னிவீர ஆட்சேர்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பித்தவர்கள் ஆள்சேர்ப்பு முகாமில் தேவையான ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்களுடன் நகல்களையும் எடுத்துவர வேண்டும். 



 முதல்கட்டமாக, அவர்களுக்கு உடல் பரிசோதனை தேர்வு நடத்தப்பட்டது. விண்ணப்பதாரரின் உயரம், நீளம், மார்பளவு, கல்விச் சான்றிதழ் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும். தேர்ச்சி பெறுபவர்களுக்கு 2-ஆவது கட்டமாக உடல் திறன் தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அக்னிவீர் திட்டம்


இந்திய ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, அக்னிபத் என்று இந்தியில் அழைக்கப்படும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


பிற பயன்கள் என்ன?


பங்களிப்பு இல்லாத ரூ.48 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுத் தொகை அளிக்கப்படும். பணியின்போது மரணமடைந்தால் ரூ.44 லட்சம் வழங்கப்பட உள்ளது. 


அக்னி வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணி


அக்னி பாதை திட்டத்தின்கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள். இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின்  முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர். 


இதற்காக இந்தியா முழுவதும் அனைத்து வகுப்புகளிலும் இருந்து 46 ஆயிரம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 90 நாட்களுக்குள் அக்னி வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது மொத்த ராணுவப் படைகளில் 3 சதவீதம் மட்டுமே. இதனால் ராணுவத்தின் பிற பிரிவினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


அக்னிபத் திட்டத்தில் இணைபவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பின்னர் 4 ஆண்டுகளுக்கு அக்னி வீரர்கள் பணியாற்றுவர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை ஊதியம் அளிக்கப்படும். அதுமட்டுமின்றி, மருத்துவ மற்றும் காப்பீட்டு பலன்கள் வழங்கப்படும். 4 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, பணிக்கால செயல்திறன் அடிப்படையில், அதிகபட்சமாக 25% பேர் இந்திய ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 4 ஆண்டு காலப் பணிக்குப் பிறகு வெளியேறும் வீரர்களுக்கு, சேவை நிதியும் திறன் சான்றிதழும் வழங்கப்படும். 


கூடுதல் தகவல்களுக்கு: https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/Notification/861_1_Terms_and_Conditions_for_Agnipath_Scheme.pdf