சென்னையை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவரும் தெற்கு ரயில்வேயில்  விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  எனவே ரயில்வே துறையின் கீழ் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


இளைஞர்கள் பலருக்கு ரயில்வேயில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை அதிகளவில் இருக்கும். ஆனால் அதற்கான கல்வித்தகுதி நம்மிடம் இல்லை என நினைக்கும் விளையாட்டு வீரர்களுக்கான அரிய வாய்ப்பு தான் தற்போது வெளியாகியுள்ளது. சென்னை தெற்கு ரயில்வேயின் கீழ் கிளார்க் மற்றும் டைபிஸ்ட்  பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்போரட்ஸ் கோட்டாவின் ( Sports Quota) அடிப்படையில் நிரப்பப்படும் பணிகளுக்கு விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேறு என்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்…





கிளார்க் மற்றும் டைபிஸ்ட்  பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் – 21


சம்பளம் –  


நிலை 2- மாதம் ரூ.19,900 – ரூ. 63,200 வரை


நிலை 4 – மாதம் ரூ.25 ஆயிரத்து 500 முதல் 81 ஆயிரம் வரை


வயது வரம்பு : 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியின் படி விண்ணப்பத்தாரர்கள் 18 வயது முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


கல்வித்தகுதி:


ரயில்வேயில் நிலை 2 பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.


ரயில்வேயில்.நிலை 4 பணிக்கு  விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


விளையாட்டுத்தகுதி:


விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விளையாட்டுகளில் ஏதாவதொன்றில் சர்வதேச, ஆசிய, தெற்காசிய போட்டிகளில் ஏதாவது ஒன்றில் பங்கேற்றிருக்க வேண்டும். இதோடு மட்டுமின்றி முதல் இடம் தான் பெற்றிருக்க வேண்டும் என்றில்லாமல்  குறைந்தபட்சம் 3 வது இடத்தில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ரயில்வேயில் பணிபுரிய வேண்டும் ஆசை உள்ளவர்கள் www.rrcmas.in என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் ஆன்லைனில் வருகின்ற நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.


விண்ணப்பக்கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு ரூ.500 விண்ணப்பக்கட்டணமாகவும், எஸ்,எஸ்.டி, பெண்கள், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரூ.250 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைனில் தான் செலுத்த வேண்டும்.


தேர்வு செய்யும் முறை:


விண்ணப்பத்தாரரின் விளையாட்டு தகுதியின்  அடிப்படையில்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குறிப்பாக 01.04.2019 ஆம் தேதிக்கு பிறகு  பெற்ற விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மேலும் சம்பந்தப்பட்ட விளையாட்டில் ஈடுபாடுடன் இருப்பது அவசியமான ஒன்று.  இதன் அடிப்படையில் தான் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.