10,+2 முடித்தவர்களுக்கு குவியும் விமானப்படை பணி வாய்ப்புகள்.. உடனே அப்ளை பண்ணுங்க..

விமானப்படையின் கீழ் பலதுறைகள் செயல்பட்டுவரும் நிலையில் தற்போது குரூப் சி யின் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Continues below advertisement

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

Continues below advertisement

இந்திய பாதுகாப்புப் படைகளின் ஒரு அங்கமாக விமானப்படை இயங்கிவருகிறது. இந்தியாவை எதிரிகளின் வான்வழித் தாக்குதலில் இருந்து பாதுகாத்தலையும், வான்வழித் தாக்குதலை முன்னின்று நடத்துதலையும் குறிக்கோளாகக் கொண்டது. விமானப்படையின் கீழ் பல துறைகள் செயல்பட்டுவரும் நிலையில் தற்போது குரூப் சி யின் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இதற்கான தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

விமானப்படையில் காலியாக உள்ள பணி மற்றும் காலிப்பணியிட விபரங்கள்:

பணி: MTS

காலிப்பணியிடம் : 17

தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒராண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Civilian Driver

காலிப்பணியிடம் : 45

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் 2 ஆண்டு பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதோடு வாகனத்தில் தீடிரென பழுது ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்கான திறன் கொண்டவர்களாக விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும்.

பணி: COOK

காலிப்பணியிடம் : 5

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓராண்டு டிப்ளமோ கேட்டரிங் படித்திருக்க வேண்டும்.

பணி : LDC

கல்வித்தகுதி : பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் மற்றும் ஹிந்தியில் 30 வார்த்தைகள் டைப் செய்யும் அளவிற்கு திறன் கொண்டிருக்க வேண்டும்.

பணி : கார்பண்டர்

காலிப்பணியிடம்: 1

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கார்ப்பண்டர் பிரிவில் ஐடிஐ தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்

பணி : Fireman

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தீயணைப்புத்துறை வீரர்களுக்கான அடிப்படை பயிற்சி பெற்றிருக்க வேண்டும். இதோடு நல்ல ஆரோக்கியமான உடற்தகுதி கொண்டிருக்க வேண்டும்.

பணி : superintendant

காலிப்பணியிடம் : 1

கல்வித்தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் ஏதாவதொரு ஒரு துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள்  http://www.davp.nic.in/writeReadData/ADS/Eng_10801_11_0019_2122b.pdf என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும். பின்னர்  கேட்கப்பட்டிருக்கும் அனைத்துத் தகவல்களையும் பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

சம்பளம் – இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஏழாவது சம்பளக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

எனவே ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெற்றுக்கொள்ளுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola