நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிலக்கரி சுரங்கத்தில் 550 அப்ரண்டிஸ் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டதாரிகள் வருகின்ற பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.


இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இங்குள்ள பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மூலம் ஆண்டுக்கு 30.6 மில்லியன் டன் பழுப்பு எரிபொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றி வரும் நிலையில் அவ்வப்போது  அப்ரண்டிஸ் பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகும். அதன்படி தற்போது 550 அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச்சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்நேரத்தில் இப்பணிகளுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என இங்கே அறிந்துக்கொள்வோம்.



NLc ல் அப்ரண்டிஸ் பணிக்கானத் தகுதிகள்:


Graduate Apprentices


காலிப்பணியிடங்கள் – 250


Electrical & Electronics Engineering – 70


Electronics& Communication Engineering - 10


Instrumentation Engineering -10


Civil Engineering - 35


Machancial Engineering - 75


Computer Science and Engineering -20


Chemical Engineering - 10


Mining Engineering - 20


கல்வித்தகுதி:


மேற்கண்ட பிரிவுகளில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.


உதவித்தொகை – மாதம் ரூ.15, 028/-


Technician (Diploma) Apprentices பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் - 300


Electrical & Electronics Engineering – 85


Electronics& Communication Engineering - 10


Instrumentation Engineering -10


Civil Engineering - 35


Machancial Engineering - 90


Computer Science and Engineering -25


Mining Engineering - 30


Pharmacy - 15 


உதவித்தொகை: மாதம் ரூ. 12,524 என நிர்ணயம்


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், என்எல்சியில் பணிபுரிய வேண்டிய ஆர்வமும் உள்ள நபர்கள் , https://www.nlcindia.in/new_website/index.htm என்ற இணையதளத்தில் Trainees & Apprentices பிரிவில் உள்ள விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.


விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வருகின்ற பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி:


The General Manager,


Learning& Development centre,


N.L.C india Limited,


Block – 20


Neyveli – 607803


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இதுக்குறித்த கூடுதல் விபரங்களை, https://www.nlcindia.in/new_website/careers/GAT-TAT%20Online%20notification.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.