பாங்க் ஆப் பரோடாவில் காலியாக உள்ள 47 Agriculture Marketing Manager பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நாளைக்குள் ( ஜனவரி 27) மறக்காமல் விண்ணப்பித்துவிடுங்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வங்கியில் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசையில் பலர் இன்ஸ்ட்யூட்களுக்கு சென்று பயின்றுவருகின்றனர். எப்படியாவது வங்கி நடத்தும் தேர்வுகளில் தேர்ச்சிப்பெற்று பணியில் சேர்ந்துவிடுவோம் என்ற நினைப்பில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாக தற்போது பாங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.





பாங்க் ஆப் பரோடா வங்கி ( Bank of Baroda)  என்பது இந்தியாவில் பரோடாவினை மையமாகக்கொண்டு செயல்பட்டுவரும் பொதுத்துறை வங்கியாகும். தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் 3082 கிளைகளுடன் இயங்கி வருகிறது. தற்போது இந்த வங்கியில் காலியாக உள்ள 47 Agriculture Marketing Manager பணியிடங்களுகக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் என்னென்ன தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.


பாங்க் ஆப் பரோடா வங்கியில் Agriculture Marketing Manager பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள்- 47


கல்வித்தகுதி:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விவசாயம், தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, கால்நடை அறிவியல், மீன்வள அறிவியல், மீன்வளர்ப்பு, வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் ஒத்துழைப்பு, வனவியல், வேளாண் உயிரி தொழில்நுட்பம், பட்டு வளர்ப்பு போன்ற ஏதாவதொரு பிரிவில் 4 ஆண்டுகள் இளநிலை பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.


மேலும் விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பிரிவில் எம்பிஏ அல்லது டிப்ளமோ  படிப்பு முடித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:


விண்ணப்பதார்கள் குறைந்தபட்டசம் 25 வயதில் இருந்து 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் பாங்க் ஆப் பரோடா பணிக்கு ஆன்லைன் மூலம் நாளைக்குள் அதாவது ஜனவரி 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://www.bankofbaroda.in/career/current-opportunities என்ற பாங்க் ஆப் பரோடாவின் அதிகாரப்பூர்வ இணையத்தில் உள்ள விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்துக்கொண்டு அதில் கேட்கப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களையும் எவ்வித தவறும் இன்றி பூர்த்தி செய்து ஆன்லைன் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பக்கட்டணம்:


பொதுப்பிரிவினருக்கு ரூ.600 விண்ணப்பக்கட்டணமாகவும், எஸ்.சி மற்றும்  எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு ரூ. 100 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை  https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/detailed-advertisement-recruitment-of-agriculture-marketing-officer-06-16.pdf என்ற லிங்கினை கிளிக் செய்து அறிந்துக்கொள்ளுங்கள்.