தமிழக சுகாதாரத்துறை இடைநிலை சுகாதாரப்பணியாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் என 7296 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


தமிழக அரசின் மாநில நல்வாழ்வு சங்கத்தின் கீழ் மாவட்டந்தோறும் துணை சுகாதார நிலையம் மற்றும் நல வாழ்வு மையங்கள் செயல்பட்டுவருகிறது. இங்கு செவிலியர், மருந்தாளர் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது இடைநிலை சுகாதாரப்பணியாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் என 7296 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முற்றிலும் தற்காலிக அடிப்படையில் பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படவுள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு வேறு என்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை? இங்கே தெரிந்துக்கொள்வோம்.





இடைநிலை சுகாதாரப் பணியாளர் (Midlevel Healthcare Provider) பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள்: 4848


கல்வித் தகுதி : செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டப்படிப்பு (B.Sc Nursing) படித்து முடித்திருக்க வேண்டும்


வயது வரம்பு :  இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 50 வயது வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


சுகாதார ஆய்வாளர் (Health Inspector) பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் : 2448


கல்வித் தகுதி :  பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் சுகாதார ஆய்வாளர் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://nhm.tn.gov.in/sites/default/files/documents/Application_MLHP.pdf மற்றும் https://nhm.tn.gov.in/sites/default/files/documents/Application_HI.pdf என்ற இணையதளப்பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முதலில் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் இதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு, கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். இறுதியில் அனைத்துத் தகவல்களும் சரியாக உள்ளதாக என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் அனைத்து ஆவணங்களையும் அந்தந்த மாவட்ட நல்வாழ்வுச் சங்களில்  வருகின்ற டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு  முறை : மேற்கண்ட முறைகளில் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ அல்லது டிகிரி படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. எனவே இதுப்போன்ற காலக்கட்டங்களில் எளிதில் மக்கள் சிகிச்சைப்பெறுவதற்கு வசதியாகவும், தகுதியுள்ளவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக தற்போது தமிழகம் முழுவதும் இடைநிலை சுகாதாரப்பணியாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.