சென்னை பல்கலைக்கழத்தில் காலிப்பணியாக உள்ள Teaching and Research Fellow பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும் , தகுதியும் உள்ள நபர்கள் செப்டம்பர் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


இந்தியாவில் மிகப்பழமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக சென்னை பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென்னிந்திய மாணவர்கள் உள்பட ஒரிசா, மகாராஷ்டிரா மாநிலத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய சென்னை மகாணத்தின் மாணவர்களின் உயர்கல்வியை நிவர்த்திச்செய்யும் விதமாக கடந்த 1857 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கப்பட்டது. தற்போதுள்ள தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாய் பல்கலைக்கழகம் என்ற பெருமையோடும்,  மத்திய அரசின், UGC விதிமுறைகளின் படி பல துறைகளில் இப்பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் 17 துறைகள் மற்றும் 30 பேராசிரியர்களுடன் இயங்கி வந்த இப்பல்கலைக்கழகம் எண்ணற்றத் துறைகளோடு செயல்பட்டுவருகிறது.





இப்பல்கலைக்கழகத்தில் அவ்வப்போது பல துறைகளின் கீழ் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது, Department of Politics and Public Administration பிரிவில் Teaching and Research Fellow பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எம்.ஏ (MA ) முடித்தவர்கள் விண்ணப்பிப்பவர்கள் எனலாம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேறு என்னென்ன தகுதிகள் உள்ளது என அறிந்துக்கொள்வோம்.


சென்னை பல்கலைக்கழத்தில் Department of Politics and Public Administration பிரிவில் Teaching and Research Fellow விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் சில ஆண்டுகளாவது பணிபுரிந்திருக்க வேண்டும் என வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை செப்டம்பர் 16 ஆம் தேதிக்கள் அனுப்பி வைக்க வேண்டும்.


மேலும் இந்த விண்ணப்பத்தோடு விண்ணப்பத்தாரின் முழு விபரம் மற்றும் அனைத்து கல்விச்சான்றிதழ் நகல் மற்றும் பணி அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து” Professor  and Head, Department of Politics and Public Administration, University of madras, Chepauk campus, Chennai- 600005, phone- 044- 25399698 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





இதனையடுத்து தகுதியுள்ள நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான நேர்காணல் வருகின்ற செப்டம்பர் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இதில் தேர்வாகும் நபர்கள் Department of Politics and Public Administration பிரிவில் Teaching and Research Fellow  தற்காலிகமாக பணிபுரிய வாய்ப்பளிக்கப்படும் எனவும் இவர்களுக்கு ரூ. 15 ஆயிரம் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.