கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation officer) மற்றும் உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


இந்தப் பணி தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 


பணி விவரம் :


சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation officer) 


உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator)


ஊதிய விவரம்:


சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation officer) - ரூ.27,804/-


உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) - ரூ.13,240/


கல்வித் தகுதி:



  • சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation officer ) பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் LLB முடித்தவராகவும் பெண்கள் மற்றும் குழந்தை உரிமை தொடர்பான அரசு / அரசு சாரா நிறுவனம் / சட்டம் சார்ந்த நிறுவனங்களில் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

  • பெண்கள் மற்றும் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் தொடர்பான நல்ல புரிதல் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

  • உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant cum Data Entry Operator) பணியிடத்திற்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • தட்டச்சு கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தகுதியை (Typewriting Tamil and English Senior level) முடித்திருக்க வேண்டும். 

  • அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு (DCA) முடித்திருக்க வேண்டும். கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 


வயது வரம்பு:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் 15.03.2023 அன்று 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.


எப்படி விண்ணப்பிப்பது?


விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 15.03.2023 அன்று மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களை https://coimbatore.nic.in -என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,


2வது தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் வளாகம்,


கோயம்புத்தூர் – 641 018 


பணியிட எண்ணிக்கை உள்ளிட்ட கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2023/03/2023030131.pdf - என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்த்து தெரிந்து கொள்ளவும்.




மேலும் வாசிக்க..


TNPSC Group 4 Result: எப்போதுதான் குரூப் 4 தேர்வு முடிவுகள்?- சமூக வலைதளங்களில் பொங்கிய தேர்வர்கள்; அறிவிப்பு வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி


Kovai Kutralam: ஆர்ப்பரித்து கொட்டும் கோவை குற்றாலம் அருவிகள் - ஒரு டிரிப் போலமா..?