இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக எல்ஐசியில் உதவியாளர் பணிக்கான நியமனம் விரைவில் வெளியாகவுள்ளது. எனவே ஆர்வமுள்ள வேலை தேடும் இளைஞர்கள் இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வ இணையத்தின் வாயிலாகத் தெரிந்துக்கொள்ளலாம்.


நம்மில் பலர் பாதுகாப்பான முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தோம் என்றால் முதலில் நமக்கு ஞாபகத்திற்க வருவது எல்ஐசி இன்சுரன்ஸ் தான். அந்தளவிற்கு இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாகியுள்ள பொதுத்துறை நிறுவனம் தான் எல்ஐசி. நாடு முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் எல்ஐசியில் அவ்வப்போது பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும். இந்நிலையில் தற்போது எல்ஐசி உதவியாளர் பணிகளுக்கான தேர்வு வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாகும் என உத்தேசிக்கப்படுகிறது. எனவே  வேலைத் தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பதை எல்ஐசியின் https://licindia.in/Home என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் உதவியோடு தெரிந்துக்கொள்ளுங்கள். தற்போது இப்பணியிடங்களுக்கான தகுதிகள், வயது வரம்பு என்ன? என்பது குறித்து இங்கு அறிந்துக்கொள்வோம்.



எல்ஐசியில் உதவியாளர் ஆவதற்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் : பொதுத்துறை நிறுவனமாக எல்ஐசியில் கடந்த ஆண்டு  நாடு முழுவதும் பல்வேறு மண்டலங்களில் உதவியாளர் பணிக்கு 7919 இடங்களுக்கானத் தேர்வு நடைபெற்றது. எனவே இந்த ஆண்டும் அதே எண்ணிக்கையில் தான் பணியிடங்கள் நிரப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


கல்வித்தகுதி:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


 மேலும் விண்ணப்பதாரர்களுக்கு கணினி கையாள்வது குறித்து தெரிவிக்க வேண்டும்.


வயது வரம்பு:


எல்ஐசியில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் 21 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இதோடு எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவனர்,முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு அரசு விதிகளின் படி ரிலாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.


எல்ஐசி உதவியாளர் பணிக்கானத் தேர்வு  முறை:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களுக்கு முதன்மைத்தேர்வு, மெயின் மற்றும் Language Proficiency Test ஆகிய மூன்று முறைகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  முதலில் முதன்மைத்தேர்வில் பெறும் மதிப்பெண்களைப்பொறுத்து தான் அடுத்த இரண்டு தேர்வுகளுக்கும் விண்ணப்பத்தார்கள் தகுதி பெறுவார்கள்.





சம்பளம்:


மேற்கண்ட 3 நிலைகளிலும் வெற்றி பெற்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு  அடிப்படை சம்பளம்ரூபாய் 14, 435 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதோடு மற்ற அனைத்து அலவன்களும் உட்பட ரூபாய் 40 ஆயிரம் இருக்கும் என எதிர்ப்பாரக்க்ப்படுகிறது.


விண்ணப்பிக்கும் முறை:


எல்ஐசி உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் விரைவில் https://licindia.in/Home என்பதால் அதனடிப்படையில் தான் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ.510 மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு ரூ. 85 விண்ணப்பக்கட்டணமாக இருக்கும்.