வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அதில் உணவு பாதுகாப்பு சம்மந்தப்பட்ட துறைகள் சம்மந்தப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படியாக காலிப்பணியிடங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் 119 பணியிடங்களை காலியிடங்களாக அறிவித்துள்ளது. இவை உணவு பாதுகாப்பு அதிகாரி பணிக்கான காலியிடங்கள் ஆகும். உணவு தொழில்நுட்பத்தில் இளங்கலை, பால் தொழில்நுட்பத்தில் இளங்கலை, பயோ டெக்னாலஜியில் இளங்கலை, எண்ணெய் தொழில்நுட்பத்தில் இளங்கலை, வேளாண் அறிவியலில் இளங்கலை, நுண்ணுயிரியலில் இளங்கலை, இவற்றில் ஏதாவது ஒன்றில் பட்டம் பெற்றிருப்பவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வேதியியலில் முதுநிலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார்கள். இவையன்றி மருத்துவத் துறையில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூபாய் 35,900 முதல் ரூபாய் 1,13,500 வரை அறிவித்துள்ளார்கள். இந்த வேலைக்கு தேர்வாவதற்கு இரண்டு முறைகளில் தேர்வு எழுதலாம். எழுத்துமுறை தேர்வு ஒன்றும், கணினி முறை தேர்வு ஒன்றும் நடத்துகின்றனர். அதில் தேர்ச்சி பெறுவோர் அதன் பின்பு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க பெறுவர். அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பொது மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.700 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்க பட்டுள்ளது. எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்தி இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக இந்த மாதம் 28 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: 119
பணி: உணவு பாதுகாப்பு அதிகாரி
தகுதி : உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், பயோடெக்னாலஜி, எண்ணெய் தொழில்நுட்பம், வேளாண் அறிவியல், கால்நடை அறிவியல், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல் போன்ற ஏதாவதொரு பிரிவுகளில் இளநிலைப் பட்டம் அல்லது வேதியியல் பிரிவில் முதுநிலைப் பட்டம்.
சம்பளம்: மாதம் ரூ.35,900 ரூ.1,13,500
விண்ணப்பிக்கும் இணையதளம்: www.mrb.tn.gov.in
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.10.2021
மேலும் விபரங்கள் அறிய www.mrh.tn.gov.in அல்லது https://f/21.mrbonlinc.in/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்