அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள உதவிப் பேராசிரியர், உதவி நூலகர், உடற்கல்வி துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 13-ம் தேதியில் இருந்து 18-ம் தேதியாக மாற்றப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் வரும் 18-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அஞ்சல் மூலமாக விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி தேதியும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்
- உதவிப் பேராசிரியர்
- உதவி நூலகர்
- உடற்கல்வி உதவி இயக்குநர்
பணி இடம்
அரியலூர், ஆரணி, திண்டுக்கல்,காஞ்சிபுரம், நாகர்கோயில், பண்ரூட்டி, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், திருக்குவளை, திண்டிவனம், தூத்துக்குடி, விழுப்புரம், திருச்சி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழகங்களில் இந்த வேலைவாய்ப்பில் மூலம் பணிக்கு அமர்த்தப்படுவர்.
கல்வித் தகுதி:
- பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணபிக்க B. E. / B. Tech. / B. S. and M. E. / M. Tech. / M. S. or Integrated M. Tech ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 70% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். CGPA 10-Point Scale படி மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
- நெட்ச்/ ஸ்லெட் (National Eligibility Test (NET), (State Level Eligibility Test - SLET / SET conducted by the Government of Tamil Nadu),) தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- M.Phil. / Ph.D முடித்தவர்கள் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
- நிர்வாக துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க / PGDM / C.A. / ICWA/ M. Com ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
இதற்கு விண்ணப்பிக்க பட்டியலலின / பழங்குடியின பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ஜி.எஸ்.டி.-உடன் சேர்த்து ரூ.472/- பொதுப் பிரிவினருக்கு ஜி.எஸ்.டி. -உடன் சேர்த்து ரூ.1,180 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
வயது வரம்பு விவரம்:
1, ஜூலை, 2023 -ன் படி 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
இந்தப் பணிக்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.aiu.ac.in/ - என்ற இணைப்பை க்ளின் செய்து ஆன்லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும். ஆஃப்லைன் விண்ணப்பங்களையும் சமர்பிக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“Application for the post of ___________________ in the Department(s) of ______________ and code No(s). ______.” என்று அஞ்சல் உறையின் மீது குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி
Registrar,
Anna University Chennai – 25
விண்ணபிக்க கடைசி தேதி - 18.12.2023 17.30 மணி வரை..
அஞ்சல் வழியாக விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி - 22.12.2023 17.30 மணி வரை
விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய https://rcell.annauniv.edu/aurecruitment_new_cc/assets/001_RC_UCE_RC_2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
5-வது படித்திருந்தாலே போதும்; குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலை
சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
சுகாதார பணியாளர்
கல்வித் தகுதி
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் நலக்குழுமம், இளைஞர் நீதிக்குழுமம் மற்றும் நன்னடத்தை அலுவலர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் பணிக்கு அமர்த்தப்படுவர்.
வயது வரம்பு விவரம்
இதற்கு விண்ணப்பிக்க 01.07.2023 -ன் படி 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://vellore.nic.in/ - என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தினை தரவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2023/12/2023120868.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
District Child Protection Officer,
District Child Protection Unit,
Anna Salai, Vellore-632001.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.12.2023