அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (24/08/2023) கடைசி.


இந்த வேலைவாய்ப்புக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை காணலாம். 


பணி விவரம்:


அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பணிபுரிவதற்கு தற்காலிகமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 


College of Engineering Guindy Campus



  • சிவில் பொறியியல் துறை - 2

  • கணிதம் - 5

  • ஆங்கிலம் - 5

  • மெக்கானிகள் இஞ்சினியரிங் - 3


Madras Institute of Technology Campus – Applied Science & Humanities



  • ஆங்கிலம் - 8

  • கணிதம் - 4

  • இயற்பியல் -1 


மொத்தம் பணியிடங்கள் - 28


கல்வித் தகுதிகள்



  • இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் அறிவியல், பொறியியல் அல்லது பி.டெக். படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  B. E / M.E / M.Tech படித்திருக்க வேண்டும். 

  • முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.)

  • மற்ற படிப்புகளுக்கு தேவையான துறையில் முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    இந்தப் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. ஆறு மாதங்களுக்கு பிறகு நீட்டிக்கப்படலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    NET / SLET / SET ஆகிய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:
 
இதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.25,000 வழங்கப்படும். 


தேர்வு செய்யப்படும் முறை?


 நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு நேர்காணல் அழைப்பு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். 


எப்படி விண்ணப்பிக்கலாம்?


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeKVrQCaYA4EicOEW0hK3Fg9uCsebVNnTHQhbzbvMbuUXRnAg/viewform - என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதோடு, விண்ணப்ப படிவத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.


தொடர்புக்கு..


இ-மெயில் - au.nhhid@gmail.com


தொடர்பு எண் - 044 - 22357953


Director, 
Centre for Entrepreneurship Development,
#302, Platinumn Jubilee Building, 2nd Floor,
AC Tech campus, 
Anna University, 
Chennai 


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://annauniv.edu/pdf/TF_Recruitment_CEG_MIT.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள https://www.annauniv.edu/events.php  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 24.08.2023


*****


சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வெளியிட்ட செய்திக்குறிப்பின் விவரத்தை காணலாம்.


பணி விவரம்


ஊர்க்காவல் படை வீரர்கள்


யாரெல்லாம் விண்னப்பிக்கலாம்?


சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.


கல்வி மற்றும் பிற தகுதிகள்



  • இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  • குற்றப் பின்னனி இல்லாதவர்களாகவும் நன்னடத்தை உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.

  • சென்னையில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

  • ரேஷன் கார்டு உடையவராக இருத்தல் வேண்டும்.


வயது வரம்பு


இதற்கு விண்ணப்பிக்க  18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை


தேர்வு செய்யப்படும் ஊர்க்காவல் படையினருக்கு 45 நாட்கள்தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்த பின்னர், அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் உதவுவதற்கு பணிபுரிய அனுப்பப்படுவர்.


ஊதிய விவரம்


இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு  சீருடை, தொப்பி மற்றும் காலணி ஆகியவை காவல் துறையால் வழங்கப்படும். இரவு ரோந்துப் பணி, பகல் ரோந்துப் பணி மற்றும் போக்குவரத்துப் பணிக்கு ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும்.


பெண்களுக்கு பகல் ரோந்துப் பணி மட்டும் வழங்கப்படும். சிறப்பான முறையில் பணிபுரிவோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் மற்றும் குடியரசுத் தலைவர் பதக்கம் ஆகியவை தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?


தகுதி உள்ளவர்கள் சென்னைஊர்க்காவல் படை தலைமை அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.


 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


 சென்னைஊர்க்காவல் படை தலைமை அலுவலகம்,


சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம்,


அண்ணா சாலை,


சைதாப்பேட்டை,


சென்னை-15 


தொடர்பு - 044 2345 2441/ 2442)  


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 31.08.2023