சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வெளியிட்ட செய்திக்குறிப்பின் விவரத்தை காணலாம்.
பணி விவரம்
ஊர்க்காவல் படை வீரர்கள்
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.
கல்வி மற்றும் பிற தகுதிகள்
- இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- குற்றப் பின்னனி இல்லாதவர்களாகவும் நன்னடத்தை உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.
- சென்னையில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.
- ரேஷன் கார்டு உடையவராக இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு
இதற்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
தேர்வு செய்யப்படும் ஊர்க்காவல் படையினருக்கு 45 நாட்கள்தினமும் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்த பின்னர், அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் உதவுவதற்கு பணிபுரிய அனுப்பப்படுவர்.
ஊதிய விவரம்
இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு சீருடை, தொப்பி மற்றும் காலணி ஆகியவை காவல் துறையால் வழங்கப்படும். இரவு ரோந்துப் பணி, பகல் ரோந்துப் பணி மற்றும் போக்குவரத்துப் பணிக்கு ரூ.560 சிறப்பு படியாக வழங்கப்படும்.
பெண்களுக்கு பகல் ரோந்துப் பணி மட்டும் வழங்கப்படும். சிறப்பான முறையில் பணிபுரிவோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் மற்றும் குடியரசுத் தலைவர் பதக்கம் ஆகியவை தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதி உள்ளவர்கள் சென்னைஊர்க்காவல் படை தலைமை அலுவலகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
சென்னைஊர்க்காவல் படை தலைமை அலுவலகம்,
சைதாப்பேட்டை காவல் நிலைய வளாகம்,
அண்ணா சாலை,
சைதாப்பேட்டை,
சென்னை-15
தொடர்பு - 044 2345 2441/ 2442)
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 31.08.2023
*****
தேர்வு முறை எப்படி?
* எழுத்துத் தேர்வு- 70 மதிப்பெண்கள் (தமிழ் மொழி தகுதித் தேர்வும் உண்டு. இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும். அதன்பிறகே எழுத்துத் தேர்வு நடைபெறும்.)
* உடல் தகுதித் தேர்வு- 24 மதிப்பெண்கள்
* சிறப்புத் தேர்வு - 6 மதிப்பெண்கள்
தேர்வுக் கட்டணம் எவ்வளவு?
தேர்வை எழுத விரும்பும் தேர்வர்கள் தேர்வுக் கட்டணமாக ரூ.250 தொகையைச் செலுத்த வேண்டும். எஸ்பிஐ வங்கி இ- சலானாகவோ ஆன்லைன் மூலமாகவோ செலுத்தலாம்.
மேலே குறிப்பிட்ட விவரங்களை விரிவாக அறிய: https://www.tnusrb.tn.gov.in/commonrecruitment-tnusrb.php என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.
பாடத்திட்டங்களுக்கான இணைப்பு
இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான நேரடி தேர்வு பாடத்திட்டங்களை https://www.tnusrb.tn.gov.in/pdfs/syllabus.pdf -என்ற இணைப்பில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
தேர்வு குறித்த முழு விவரங்களுக்கு: https://www.tnusrb.tn.gov.in/pdfs/InformationBrochureCR2023.pdf