அண்ணா பல்கலைக்கழத்தின் Centre for Alumini Relations and Corporate Affairs பிரிவில் உள்ள பணியிடஙகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்:


நிதி மேலாளர்


Social Media Strategist


கல்வித் தகுதி


நிதி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க ஃபினான்ஸ், வணிகவியல், பொருளாதாரவியல், கணக்கு பதிவியல் உள்ளிட்ட நிதி தொடர்பான படிப்புகளில் இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டய கணக்கர் / ICWA உள்ளிட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


Social Media Strategist பணிக்கு விண்னப்பிக்க விளம்பரம், மார்க்கெட்டிங், தொழில் மேலாண்மை, மீடியா, தொடர்பியல், இதழியல் உள்ளிட்ட துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


இந்த பணிகளுக்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:


நிதி மேலாளர் -ரூ.50,000


Social Media Strategist - ரூ.40,000


கவனிக்க..


இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்ல்கு அழைக்கப்படுவர்.


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்டவற்றை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 


டிஜிட்டல் விண்ணபத்தினை  dircarca@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


The Director,
Centre for Alumni Relations and Corporate Affairs(CARCA,
CPDE First Floor
College of Engineering Guindy Campus,
Anna University, Chennai - 25.


விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 29.09.2023


*****


உதவியாளர்


அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்:


Professional Assitant


பணியிடம்:


Madras Institute of Technology Campus  


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் அறிவியல், பொறியியல் அல்லது பி.டெக். படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  B. E / M.E / M.Tech படித்திருக்க வேண்டும். 
முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.)
மற்ற படிப்புகளுக்கு தேவையான துறையில் முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. ஆறு மாதங்களுக்கு பிறகு நீட்டிக்கப்படலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ECE, EEE, Instrumentation, Electronics உள்ளிட்ட பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:
 
இதற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு  நாள் ஒன்றுக்கு ரூ.821 ஊதியமாக வழங்கப்படும். 


தேர்வு செய்யப்படும் முறை?


நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு நேர்காணல் அழைப்பு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


எப்படி விண்ணப்பிக்கலாம்?


விண்ணப்ப படிவத்தை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


The Dean,
 Madras Institute of Technology Campus,
Anna University, Chromepet,
Chennai-600 044. 


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு  https://annauniv.edu/pdf/SCoE%20recruitment.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.


அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள https://www.annauniv.edu/events.php  - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.09.2023