டெல்லியில் உள்ள விவசாய காப்பீட்டு நிறுவனத்தில் உள்ள பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி:
Management Trainee,
காலிப்பணியிடங்கள் – 50
ஊதியம் –மாதம் ஒன்றுக்கு ரூ.60,000
கல்வித்தகுதி: கலை, அறிவியல், வணிகவியல், விவசாயம், தோட்டக்கலை, மேலாண்மை, புள்ளியியல், மனிதவள மேலாண்மை ஆகிய பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: ஆன்லைன் வழியாக
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: பிப்ரவரி 25 ஆம் தேதி
தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000.
எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி ஆகிய பிரிவினர் ரூ.200. கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி -5 , 2023
விண்ணப்பிக்க வேண்டிய முறை:
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் AIC OF INDIA LTD. என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பின்னர், விண்ணப்ப அறிக்கையை பதிவிறக்கம் செய்யவும்
- பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
விண்ணப்ப படிவத்தை பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் பூர்த்தி செய்து, குறிப்பிட்ட இணையதளத்தில் சமர்பிக்க வேண்டும்.
மேலும், விரிவான மற்றும் கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும். அதுவே இறுதியான உறுதியான தகவல்களாகும்.https://www.aicofindia.com/AICEng/Pages/default.aspx