இந்திய கடலோரக் காவல் படையில் (Indian Coast Guard)  காலியாக உள்ள (Posts of Navik (General Duty),Navik (Domestic Branch)  பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 255 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


பணி விவரம்: 


நாவிக் (Navik -General Duty) : 225


நாவிக் (Navik -Domestic Branch) : 30


மொத்த பணியிடங்கள் - 255


கல்வித் தகுதி: 


நாவிக் - ஜென்ரல் டியூட்டி பதவிக்கு மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  கணிதம், இயற்பியல் பாடங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


நாவிக் Domestic Branch பணிக்கு 10-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 


வயது வரம்பு:


இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 22 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்: 


இந்தப் பணிகளுக்கு Pay level 3-இன் படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்ந்தெடுக்கும் முறை:


இந்தப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு,மருத்துவத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இதில், தேர்ந்தெடுக்கபபட்டவர்கள், இந்திய கடற்படை மாலுமிகளின் பயிற்சி மையமான ஐஎன்எஸ் சில்கா-வில் பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.


தேர்வு முறை: 




விண்ணப்பக் கட்டணம்:


 விண்ணப்பக் கட்டணம் ரூ.300- ஐ செலுத்த வேண்டும். பட்டியலின , பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் மட்டுமே கட்டணத்தை செலுத்த வேண்டும்.


விண்ணப்பிப்பது எப்படி?


 https://joinindiancoastguard.cdac.in - என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:  16.02.2023 மாலை 5.30 மணி வரை


அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://joinindiancoastguard.gov.in/sailorentry.html-என்ற லிங்கை க்ளிக் செய்து காணவும்.




மேலும் வாசிக்க..


TN Govt on Entrepreneurship: தொழில் முனைவோர் ஆக விருப்பமா?.. தமிழக அரசு வழங்கும் அரிய வாய்ப்பு


India Post GDS Recruitment 2023: 10-வது படித்திருந்தாலே போதும்..! இந்திய தபால்துறையில் கொட்டிக்கிடக்குது வேலைகள்..! முழு விவரம்..