அக்னிவீர்  திட்டத்தில் ஆட்சேர்ப்பு தேர்விற்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.


அக்னிவீர்  திட்டத்தில் ஆட்சேர்ப்பு

 

இந்திய ராணுவ வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, அக்னிபத் என்று இந்தியில் அழைக்கப்படும் ‘அக்னி பாதை’ என்ற திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்தது. அக்னி பாதை திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் (அக்னி வீர்) என்று அழைக்கப்படுவார்கள் எனவும் இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின்  முப்படை எனப்படும் தரைப் படை, கப்பல் படை, விமானப் படைகளில் பணியாற்றுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டதின் கீழ் பல இளைஞர்கள் பணிக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

 

பணிகள் என்ன?


இந்நிலையில் திருச்சி இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் மூலம், 2025-2026 ஆம் ஆண்டுக்கு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் மற்றும் டிரேட்ஸ்மென் ஆகிய பிரிவுகளில் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.  

 

எப்படி பதிவு செய்வது?

அக்னி வீர் திட்டத்தில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் 12.03.2025 முதல் 10.04.2025 வரை பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இது தொடர்பாக கல்வி தகுதி மற்றும் கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் திருவில்லிபுத்தூரிலுள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் அணுகி விவரம் பெற்றிடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன், தெரிவித்துள்ளார்.