நன்கொடையாளர்கள் நிதி என மொத்தம் ரூ.3,30,000 மதிப்பீட்டில் நிவாரணத் தொகையும் அவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வழங்கப்பட்டது.


கொத்தடிமைத் தொழிலாளர் மீட்பு


சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா, கடம்பன்குளம் கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த கொத்தடிமைத் தொழிலாளர் ஒரு நபர் மீட்கப்பட்டு, அந்நபரின் குடும்பத்தாரிடம் அவரை ஒப்படைப்பு செய்து, மாவட்ட கொத்தடிமை மறுவாழ்வு நிதி மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் விருப்ப நிதி, நன்கொடையாளர்கள் நிதி என மொத்தம் நிவாரணத் தொகை அவரின் வங்கிக் ரூ.3,30,000/- மதிப்பீட்டில் கணக்கில் செலுத்தப்பட்டு, அதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், வழங்கினார்.

 

சிறப்பு கூட்டாய்வு


 

காளையார்கோவில் தாலுகா, கடம்பன்குளம் கிராமத்தில் ஆடு மேய்க்கும் தொழிலில் 20 ஆண்டுகளாக கொத்தடிமைத் தொழிலாளியாக இருந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த அப்பாராவ் என்ற கொண்டகாரி சுக்கா மீட்கப்பட்டு, அவருடைய குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளார். திருப்பத்தூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சட்டம் சார்ந்த தன்னார்வலர், IRCDC தொண்டு நிறுவன செயல் இயக்குநர் ஆகியோர் அடங்கிய மாவட்ட கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு (District Task force) குழுவினர் சிறப்பு கூட்டாய்வு மேற்கொண்டனர்.

 

20 வருடங்களாக ஊதியம் ஏமாற்றம்



 

அந்த ஆய்வில், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா, குருந்தனிவாரியேந்தல் குரூப், கடம்பங்குளம் கிராமத்தில்அண்ணாத்துரை என்பவரின் வீட்டில் ஆந்திரா மாநிலம், பார்வதிபுரம் மண்யம் மாவட்டத்தைச் சேர்ந்த கிஷா என்பவரது மகன் அப்பாராவ் (வயது-60) என்ற கொண்டகாரி சுக்கா என்பவர் கடந்த 20 வருடங்களாக ஊதியம் ஏதுமின்றி அண்ணாத்துரை என்பவரின் வீட்டில் ஆடு மேய்க்கும் தொழிலில் கொத்தடிமை தொழிலாளியாக இருந்தது கண்டறியப்பட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அந்நபர் மீட்கப்பட்டு, அந்நபரின் உறவினர்களை கண்டறிய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், மீட்கப்பட்ட நபருக்கு, மாவட்ட கொத்தடிமை மறுவாழ்வு நிதி மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் விருப்ப நிதி, நன்கொடையாளர்கள் நிதி என மொத்தம் ரூ.3,30,000 மதிப்பீட்டில் நிவாரணத் தொகை அவரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.