8,997 சத்துணவு சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புதலில் புதிய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.


அரசாணையில் என்ன திருத்தங்கள்?


8,997 சத்துணவு சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பும் விவகாரத்தில் அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஓராண்டு தொகுப்பு ஊதியத்திற்கு பின் சிறப்பு காலமுறை ஊதியம்  மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை  கூறி உள்ளதாவது:


புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின்படி 8,997 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் (Consolidated Pay) நிரப்புதலில் திருத்தம் வெளியிடப்படுகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, அரசாணை (நிலை) எண். 33 நாள் 13.03.2025


புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மொத்த சமையல் சத்துணவுத் திட்டத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களில், 8997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும் மாதம் ரூ.3000/- வீதம் தொகுப்பூதியத்தில் நிரப்பிட ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற இடைக்கால ஆணையில் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமூக மகளிர் உரிமைத் துறை திருத்தங்கள் பின்வருமாறு:


(i). "தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களுள், 12 மாதங்கள் திருப்திகரமாக பணியினை முடிக்கும் தகுதியான பணியாளர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியம் (சிறப்பு கால முறை ஊதிய ((STS) நிலை-1 (ரூ.3000-9000)) வழங்கப்பட வேண்டும்" என்கிற சொற்றொடருக்குப் பதிலாக, "இவ்வாறு தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்குப்பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay -ரூ.3000-9000)) ஊதியம் வழங்கப்பட வேண்டும்' என்ற சொற்றொடர் சேர்க்கப்படுகிறது.

(ii). மேற்குறிப்பிட்ட அரசாணையின் பத்தி 3, v-ல் இறுதியிலுள்ள "சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது" என்கிற சொற்றொடருக்குப் பதிலாக நாள் 12.03.2025-ல் வெளியிடப்பட்டுள்ள ஆணையினைப் பின்பற்றி சமையல் உதவியாளர் பதவிக்கான நேரடி நியமனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும்" என்ற சொற்றொடர் சேர்க்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.