தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் என்றழைக்கப்படும் (Tamil Nadu Cooperative Milk Producers Federation Limited) ஆவின் நிறுவனத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகராக செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, திருப்பூர் மற்றும் புறநகர் பகுதிகளில் வேலை செய்வதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நாளை மறுநாள் (27.04.2023) நேர்காணல் நடைபெறுகிறது.
பணி விவரம்
கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி
பணி இடம்:
மதுரை
திருப்பூர்
ஊதிய விவரம்:
ஆவினில் தேர்தெடுக்கப்படும் கால்நடை மருத்துவ ஆலோசகரின் வருமானமானது ரூ.43,000 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பி.எஸ்.சி., கால்நடை படிப்பு ( Bachelor of Veterinary and Animal Husbandry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
26.04.2033 - ஆம் அடிப்படையில் இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பணிக்கு மாத ஊதியமாக தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.43,000 வழங்கப்படும். (ரூ.30,000 + போக்குவரத்து செலவு - ரூ.8,000 + Incentives - ரூ.5,000)
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
திருப்பூர் ஆவின்:
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் :27.04.2023 காலை 11 மணி முதல்
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
மதுரை
O/o the General Manager,
Madurai DCMPU Ltd.,
(Aavin) Madurai – 20
திருப்பூர்
Tirupur DCMPU Ltd., (Aavin),
The Aavin milk chilling center,
Veerapandi Pirivu, Palladam road, Tirupur -641605.
நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள் தங்களது தேவையான அனைத்து அசல் மற்றும் சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ப்புக்கு - 9489619036
மேலும் வாசிக்க..
TN 12th Result: தள்ளிப்போகும் பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு
TN Rain Alert: குடையுடன் வெளியே போங்க.. 14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..! சென்னையில் எப்படி?