தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு:
25.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
26.04.2023 மற்றும் 27.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
28.04.2023 மற்றும் 29.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை நிலவரம் என்ன?
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மழை அளவு (சென்டிமீட்டரில்):
பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்) தலா 7, திருச்செந்தூர் (தூத்துக்குடி), மேட்டுப்பட்டி (மதுரை), அடார் எஸ்டேட் (நீலகிரி), வட்ராப் (விருதுநகர்), குன்னூர் (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), பஞ்சப்பட்டி (கேயார்), கோத்தகிரி (நீலகிரி) தலா 6, திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), கெத்தை (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி), கருப்பாநதி அணை (தென்காசி), குந்தா பாலம் (நீலகிரி), கழுகுமலை (தூத்துக்குடி) தலா 5, கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), சிவலோகம் (கன்னியாகுமரி), பெரியப்பட்டி, (மதுரை), பொன்னமராவதி (புதுக்கோட்டை), பெரியார் (தேனி), திருமங்கலம் (மதுரை) தலா 4, அழகரை எஸ்டேட் (நீலகிரி), பிலவாக்கல் (விருதுநகர்), மைலம்பட்டி (கரூர்), மதுரை தெற்கு (மதுரை), புதுச்சேரி, பேரையூர் (மதுரை), சாத்தியார் (மதுரை), ஓமலூர் (சேலம்) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
25.04.2023: மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென் கேரளா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TN 12th Result: தள்ளிப்போகும் பிளஸ் 2 தேர்வு முடிவு தேதி: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு