ஆவடி ஓசிஎஃப்பில் 180 காலிப்பணியிடங்கள் : தகுதி 10-ஆம் தேர்ச்சிதான்.. உடனே அப்ளை பண்ணுங்க

இந்திய பொதுத்துறை நிறுவனமான பாதுகாப்பு ஆடை தொழிற்சாலை என்னும் ஓ.சி.எஃப்-ல், தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள்

Continues below advertisement

தமிழ்நாட்டின் ஆவடியில் செயல்பட்டு வரும் பாதுகாப்பு ஆடை தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு உள்ள நிலையில் மொத்தம் 180 காலிப் பணியிடங்கள் அங்கே நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கான குறைந்தபட்சத் தகுதியாக வெறும் 10-ம் வகுப்புப் படித்திருப்பது மட்டுமே போதுமானது.மேலும் ஐடிஐ முடித்தவர்களுக்கும் தொழில் பழகுநருக்கான காலிப்பணியிட அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

Continues below advertisement


இந்திய பொதுத்துறை நிறுவனமான பாதுகாப்பு ஆடை தொழிற்சாலை என்னும் ஓ.சி.எஃப்-ல், தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, ஓ.சி.எஃப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் 180 தொழில் பழகுநர் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.04.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம், அதற்கான பயிற்சி விபரங்கள்...

ஐடிஐ அல்லாத தொழில் பழகுநருக்கான காலிப்பணியிடங்கள்:

பயிற்சி இடங்கள் எண்ணிக்கை- 72

அதற்கான கல்வித் தகுதி- 10ம் வகுப்பில் 50 சதவிகித  மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பயிற்சிக்கான உதவித் தொகை ரூ. 6,600

ஐடிஐ தொழில் பழகுநருக்கான காலிப்பணியிடங்கள்
பயிற்சி இடங்களின் எண்ணிக்கை மொத்தம் 108

அதற்கான கல்வித் தகுதி: தொடர்புடைய பாடப்பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பயிற்சிக்கான உதவித் தொகை: ரூ. 7,700

விண்ணப்பிப்பதற்கான வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 14 மற்றும் அதிகபட்ச  வயது வரம்பு எதுவும் இல்லை.

Continues below advertisement
Sponsored Links by Taboola